தனியார்வசமாகும் மதுரை காந்தி மியூசியம்?

தேசதந்தை மகாத்மா காந்தியடிகளுக்கும், மதுரைக்கும் மிக நெருங்கிய சம்பந்தம் உண்டு. மதுரையில் தான், தான் உடுத்தியிருந்த ஆடையைத் துறந்து அரை நிர்வாணத்திற்கு மாறினார் அன்னல். அவரது மறைவுக்கு பின்னர், நாட்டின் சில பகுதிகளில் காந்தியடிகளின் அருங்காட்சியகத்தை நிறுவ மத்திய அரசு முடிவு செய்தது. அப்படி தேர்வு செய்யப்பட்ட இடங்களில் ஒன்றுதான் மதுரை.
1957ம் ஆண்டு, அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேரு அவர்களால் ராணி மங்கம்மாளின் அரண்மனை இருந்த இடத்தில் காந்தி மியூசியம் அமைக்கப்பட்டது.
சுமார் 13 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ள இந்த மியூசியம் தென் இந்தியாவில் இருக்கும் ஒரே காந்தி மியூசியம் என்ற பெருமையை பெற்றுள்ளது. இந்த மியூசியத்தில் அமைதி பூங்கா என்றொரு இடம் இருக்கிறது. இங்கு காந்தியின் அஸ்தியில் ஒரு பகுதி வைக்கப்பட்டுள்ளது.
இங்கு காந்தியின் வாழ்க்கையை வரலாற்றை படம்பிடித்து காட்டும் அரிய புகைப்படங்கள், அவரின் ரத்தக்கறை தோய்ந்த வேஷ்டி, மூக்குக் கண்ணாடி, அவர் நூற்ற ராட்டை மற்றும் நூல், கைக்குட்டை, செருப்பு, தலையணை, கம்பளி உள்ளிட்ட 14 பொருள்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.
இந்த மியூசியத்தை காண ஒவ்வொரு மாதமும் வெளிநாட்டினர் உட்பட சுமார் 10 ஆயிரம் பேர் வருகின்றனர். ஆனால், அவர்களுக்கு கழிப்பிட வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட எதுவும் செய்துதரப்படவில்லை.
மேலும் மியூசியத்துக்கு வர்ணம் அடித்து சுமார் 10 ஆண்டுகளுக்கு மேலாகி விட்டது. மேலும் கட்டிடங்கள் பல இடங்களில் பெயர்ந்து பரிதாபமாக காட்சியளிக்கிறது.
தற்போது இந்த மியூசியத்தை மாவட்ட கலெக்டர், மதுரை மேயர், மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர், கல்வி அமைச்சர், அரசு செயலர் உள்ளிட்ட 30 பேர் கொண்ட கமிட்டி இதை பராமரித்து வருகிறது.
இந்நிலையில் இந்த கமிட்டி 200 பேர் கொண்ட ஒரு பொதுக் குழுவை புதிதாக நியமிக்கவிருக்கிறது.
இதில் உறுப்பினராக பதிவு செய்ய விரும்புவோர் ஆண்டுக்கு ரூ. 5 ஆயிரம் கொடுத்து சேரலாம். தற்போது வரை 130 உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இதில் பணபலம் படைத்த சிலர் தாங்களே பணம் கட்டி தங்களது ஆதரவாளர்களையும் உறுப்பினர்களாக சேர்த்து வருவதாக கூறப்படுகிறது. இதன்மூலம் பொதுக்குழுவின் பெரும்பகுதியை கைப்பற்றி காந்தி மியூசியத்தை தங்களது பிடிக்குள் கொண்டு வர பார்ப்பதாகவும் தெரிகிறது.
இது குறித்து காந்தி மியூசிய செயலர் ரெங்கசாமி கூறுகையில், நிதி திரட்டவேண்டிய கட்டாயத்திலேயே புதிய பொதுக்குழு ஏற்படுத்தப்பட்டது. இதில், நன்மை, தீமை என இரண்டுமே உள்ளன. சூழ்நிலைக்குத் தகுந்தவாறு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
மேலும், காந்தி மியூசியத்தை புதுப்பிக்கும் பணிக்காக தமிழக அரசிடம் நாங்கள் நிதி கோரியுள்ளோம் என்றார்.
இந்நிலையில் காந்தி மியூசியத்தின் முழு செலவையும் அரசே ஏற்க வேண்டும், இந்த புதிய பொதுக்குழு திட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வரக்கூடாது என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
திண்டுக்கல் கொடை ரோடு விஏஓ சத்யா கனவிலும் நினைக்காதது.. அரசு ஊழியர்கள் அறிய வேண்டிய பாடம் -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம்












Click it and Unblock the Notifications