கையில் காசு இல்லை: 80 வயது இமெல்டாவின் இன்றைய நிலை

பிலிப்பைன்ஸின் அழகு ராணியாக வலம் வந்தவர் இமெல்டா. இவரது கணவர் மார்க்கோஸ் அதிபராக இருந்தபோது பெருமளவில் சொத்துக்களைக் குவித்தார். அரசுப் பணத்தில் மஞ்சள் குளித்தார். அவற்றில் பெரும்பாலானவை இமெல்டாவுக்குத் தேவையான நகைகள், அழகு சாதனப் பொருட்கள், உடைகள், செருப்புகள் உள்ளிட்டவை வாங்குவதற்காக மார்கோஸ் அடித்த கொள்ளை.
இன்று மார்க்கோஸ் இல்லை. இமெல்டாவும் அழகு ராணி என்ற அந்தஸ்தை வீட்டு நீங்கி வீட்டோடு கிடக்கிறார். இமெல்டாவுக்கு ஜூலை 2ம் தேதி 80 வயது பிறக்கிறது.
கோடிக்கணக்கான பணத்தில் படுத்துப் புரண்டு வந்த இமெல்டா இன்று கையில் காசு இல்லாமல் இருக்கிறாராம். கையில் காசு இல்லாவிட்டாலும் கூட அவரது விரலில் 22 கேரட் வைர மோதிரம் ஜொலிக்கிறது. அது மட்டும்தான் இன்னும் தன்னிடம் உள்ள ஒரே சொத்து என்கிறார் இமெல்டா.
இதுகுறித்து இமெல்டா கூறுகையில், 80 வயதாகி விட்டது. இன்னும் பழைய நிலைக்கு வர முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறேன் என்கிறார் கண்களில் நீர் பனிக்க.
இரண்டு அடுக்கு மாடி வீட்டில் குடியிருக்கிறார் இமெல்டா. இன்னும் கூட பப்ளிசிட்டி பிரியையாகவே இருக்கிறார். கடந்த வாரம் அவரைப் பார்க்க பத்திரிக்கையாளர்கள் வந்தபோது எடுப்பான சிவப்பு நிற உடை அணிந்து நல்ல மேக்கப்புடன் பளிச்செனக் காணப்பட்டார் இமெல்டா.
1986ம் ஆண்டு மார்க்கோஸுக்கு எதிராக பிலிப்பைன்ஸில் பெரும் புரட்சி வெடித்தது. இதனால் மார்க்கோஸ் ஆட்சியை இழந்தார். பின்னர் ஹவாய் தீவுக்கு தப்பி ஓடினார். அவருடன் இமெல்டாவும் தப்பி ஓடினார்.
பின்னர் மார்க்கோஸ், இமெல்டாவின் மாளிகையை அதிகாரிகள் சோதனையிட்டபோது அங்கிருந்த நகைக் குவியலையும், செருப்பு உள்ளிட்ட ஆடம்பரப் பொருட்களின் குவியலையும் பார்த்து அதிர்ந்து போயினர். செருப்புகள் மட்டும் 1220 ஜோடி என்பது குறிப்பிடத்தக்கது.
அப்படி இருந்த இமெல்டா இன்று இப்படி ஆகி விட்டார்..
தமிழகத்திலும் இதேபோல நூற்றுக்கணக்கான ஜோடி செருப்புகள் ஒரு வீட்டில் கிடைத்தனவே....
ஞாபகம் வருதே.. ஞாபகம் வருதே..!
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications