மைக்கேல் ஜாக்ஸன்...சில குறிப்புகள்!
* ஆகஸ்ட் 29, 1958ல் அமெரிக்காவின் இண்டியானாவில் உள்ள கேரியில் பிறந்தார்.
* 1962ல் தன்னுடைய 4 சகோதரர்களோடு இணைந்து ஜாக்சன்5 எனும் இசைக்குழு மூலம் அறிமுகமானார்.
* 1969ல் ஜாக்சன் குழுவுக்கு டெட்ராய்ட் நகரை சேர்ந்த இசைத்தட்டு நிறுவனத்திடமிருந்து முதல் ஒப்பந்தம் கிடைத்தது.
* 1970ல் மைக்கேல் ஜாக்சன் தனியாகப் பாட ஆரம்பித்தார்.
* 1979ல் குவின்சி ஜோன்ஸ் தயாரிப்பில் "ஆப் தி வால்' ஆல்பம் வெளியாகி ஒரு கோடிக்கு மேல் விற்பனையானது.
* 1982ல் திரில்லர் ஆல்பம் வெளியானது. 5.4 கோடி ஆல்பங்கள் விற்பனையாகி அவரை இசையுலகின் மன்னராக்கியது.
* 1984ல் பெப்சி விளம்பரத்தில் நடித்துக் கொண்டிருந்த போது அவருடைய முகத்தில் தீக்காயம் ஏற்பட்டது. இதே ஆண்டில் 8 கிராமிய விருதுகளை வென்று சாதனை படைத்தார்.
* 1985ல் ஏடிவி மியூசிக் எனும் இசை நிறுவனத்தை விலைக்கு வாங்கினார். அதே ஆண்டு 'வி ஆர் த வேர்ல்டு' எனும் பாடலை ஆப்பிரிக்க வறுமையை போக்குவதற்காக எழுதினார்.
* 1987ல் 'பேட்' எனும் ஆல்பம் வெளியானது. 2.60 கோடிக்கு மேல் விற்பனையானது.
* 1988ல் மைக்கேல் ஜாக்சனின் சுயசரிதை "மூன் வாக்' வெளியானது.
* 1990ல் மைக்கேல் ஜாக்சன் முதல் முறையாக அறுவை சிகிச்சை முகமூடி அணிந்து காணப்பட தொடங்கினார்.
* 1992ல் 'டேஞ்சரஸ்' ஆல்பம் வெளியானது.
* 1992ல் 13வது சிறுவனின் தந்தை ஜாக்சன் தன்னுடைய மகனை பாலியல் ரீதியாக பலாத்காரம் செய்ததாக புகார் தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
* 1994ல் மைக்கேல் ஜாக்சன் புகழ் பெற்ற பாடகர் எல்விஸ் பிரெஸ்லியின் மகள் லிசா மேரியை மணந்து கொண்டார்.
* 1995ல் ஹிஸ்டரி ஆல்பம் வெளியானது.
* 1996ல் லிசடா மேரியுடன் விவாகரத்து
* 1996ல் டெபி ரோ எனும் நர்சை மணந்து கொண்டார். 3 ஆண்டுகள் கழித்து அவரையும் விவாகரத்து செய்தார்.
* 2001ல் 'இன்வின்சிபில்' ஆல்பம் வெளியானது.
* 2002ல் இசைத் தட்டு நிறுவனங்கள் குறிப்பாக கருப்பின பாடகர்களை சுரண்டுவதாக மைக்கேல் ஜாக்சன் போர்க்கொடி எழுப்பினார்.
* அதே ஆண்டு நவம்பர் மாதம் மைக்கேல் ஜாக்சன் ஜெர்மனியில் உள்ள ஒரு ஓட்டலில் தங்கியிருந்தபோது தன்னுடைய 9 மாத குழந்தை பிரின்ஸ் மைக்கேலை தலைகீழாக தொங்கவிட்டதில் பெரும் சர்ச்சைக்கு ஆளானார்.
* 2003ல் ஏல நிறுவனம் ஒன்று அவர் வாங்கிய ஓவியங்களுக்கான தொகையை கொடுக்கவில்லை என்று வழக்கு தொடர்ந்தது.
* இதே ஆண்டு பிப்ரவரி மாதம் மைக்கேல் ஜாக்சன் தொடர்பான செய்திப் படம் வெளியானது. அவருடைய மேலாளர் சம்பள பாக்கிக்காக வழக்கு தொடர்ந்தார். நவம்பர் மாதம் ஜாக்சனின் கலிபோர்னியா பண்ணை வீட்டில் ரெய்டு நடைபெற்றது. சிறுவனை பாலியல் பலாத்காரம் செய்த புகாரில் ஜாக்சன் மீது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. நவம்பர் 20ந் தேதி கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுதலையானார். டிசம்பர் மாதம் அவர் மீது இந்த வழக்கில் அதிகாரபூர்வமாக குற்றம் சாட்டப்பட்டது.
* 2004ல் மைக்கேல் ஜாக்சன் முதல் முறையாக பொது நிகழ்ச்சியில் பங்கேற்று தன் மீதான புகாரை மறுத்தார்.
* 2005ல் ஜாக்சன் வழக்கில் விசாரணை தொடங்கியது. அனைத்து புகாரிலிருந்தும் அவர் விடுவிக்கப்பட்டார்.
* 2007-ம் ஆண்டு அவரது த்ரில்லர் ஆல்பம் வெளியாகி 25 ஆண்டுகள் ஆனதையொட்டி சிறப்பு ஆல்பம் வெளியிடப்பட்டது.
* இந்த ஆண்டு மார்ச் மாதம் மைக்கேல் ஜாக்சன் மீண்டும் இசை நிகழ்ச்சி நடத்தப் போவதாக அறிவித்தார். இந்த நிகழ்ச்சிக்காக தீவிரமாக தயாராகி வந்த நிலையில் மரணமடைந்தார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக













Click it and Unblock the Notifications