அறிவியல் தமிழ் மன்ற தலைவராக கவிஞர் கா.வேழவேந்தன்
Subscribe to Oneindia Tamil
சென்னை: அறிவியல் தமிழ் மன்றத்தின் தலைவராக கவிஞர் கா.வேழவேந்தன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,
தமிழ் வளர்ச்சித்துறையின் கீழ் செயல்பட்டு வரும் அறிவியல் தமிழ் மன்றத்தின் தலைவராக மணவை முஸ்தபா 2006ம் ஆண்டில் இருந்து பணியாற்றி வந்தார்.
அவர் உடல் நலம் பாதிக்கப்பட்டு, கடந்த பல மாதங்களாக மருத்துவ சிகிச்சை மேற்கொண்டு வருவதால், அறிவியல் தமிழ் மன்றத்தின் தலைவர் பொறுப்பில் இருந்து தாமாக முன்வந்து விலகிக் கொள்ள விரும்புவதாக தற்போது அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
அந்த கடிதத்தை ஏற்று, மணவை முஸ்தபாவை அறிவியல் தமிழ் மன்றத்தின் தலைவர் பொறுப்பில் இருந்து விடுவித்தும், அவரது இடத்தில் புதிய தலைவராக கவிஞர் கா.வேழவேந்தனை நியமனம் செய்தும் முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார் என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications