தென்மலையில் சூழ்நிலை சுற்றுலா மையம்
இந்த திட்டத்தின் முக்கிய அம்சங்கள்:
1. தென்மலையையும், அதன் சுற்று புறத்தையும் ஒரு மிகப் பெரிய சுற்றுலா தலமாக வளர்ச்சியடைய செய்வது.
2. சூழ்நிலை சுற்றுலாவை மேம்படுத்த தகுந்த வழிமுறைகளின் அடிப்படையில் தென்மலையையும் அதன் சுற்று புறங்களையும் இயற்கை சூழ்நிலையை நிலைநிறுத்துவது.
3. மற்ற சுற்றுலா தலங்களின் வளர்ச்சி திட்டங்களுக்கு மாதிரியாக உருவாக்குவதற்கு சூழ்நிலையை நிலை நிறுத்தும் சுற்றுலா வளர்ச்சிக்கு ஒரு நன்கு திட்டமிடப்பட்ட சுற்றுலா தலமாக தென்மலையை உருவாக்குவது.
சூழ்நிலை சுற்றுலா தலங்களுக்கு வரும் சுற்றுலா பயணிகள் அனைவரும் உண்மையான சூழ்நிலை சுற்றுலா விரும்பிகள் அல்ல. அதனால் சாதாரண சுற்றுலா பயணிகளாக வரும் அவர்களுக்கு அவர்களது தேவையை பூர்த்தி செய்ய வேண்டியுள்ளது.
இத்திட்டத்தில் தென்மலை அணைக்கட்டு மற்றும் அதன் சுற்று பகுதிகள் சாதாரண சுற்றுலா பயணிகளின் தேவையை பூர்த்தி செய்வதுடன் சூழ்நிலை சுற்றுலா பயணிகளையும் தென்மலை அணைக்கட்டின் சுற்று பகுதிகள் திருப்தியடைய செய்கிறது.
இங்கு வரும் சுற்றுலா பயணிகள் தரம் பிரிக்கப்பட்டு பல குழுக்களாக சுற்றி பார்க்க அனுமதிக்கப்படுகின்றனர். (சாதாரண சுற்றுலா பயணிகள் அவர்கள் ரசிக்கும் இடங்கள் கண்டறியப்பட்டு அந்த இடங்களுக்கு சூழ்நிலை சூழ்நிலை சுற்றுலா பயணிகளை அவர்களின் ரசனைக்கு ஏற்ற இடங்களுக்கு அனுப்பி வைக்கபடுகிறார்கள்.
இத்திட்டம் கேரள பண்பாடு மற்றும் சமூக நோக்கங்களையும் குறி வைத்துள்ளது.
நவம்பர் முதல் ஜனவரி வரை லட்சக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் வந்து செல்லும் சபரிமலை இச்சுற்றுலா மையத்திற்கு அருகாமையில் அமைந்துள்ளது மட்டுமல்லாமல் வேறு பல புனித தலங்களும் இதன் அருகாமையில் அமைந்துள்ளது.
இத்திருத்தலத்தை வருடத்திற்கு ஒரு முறை பக்தர்கள் வந்து தரிசிக்கின்றனர். இது இப்பகுதியின் புனித பயண சுற்றுலாவிற்கு வழி வகுகிறது. ஆனால் இப்பகுதி சூழ்நிலையால் முக்கியத்துவம் வாய்ந்தபடியால் சுற்றுலா நிகழ்வுள்ள நிலைநிறுத்தல் என்ற முக்கிய குறிக்கோளின் அடிப்படையிலேயே அமைய பெற்றது.
இத்திட்டத்தினை மூன்று வகையாக பிரிக்கலாம். சாதாரண சுற்றுலா, சூ்ழ்நிலை சுற்றுலா, புனித பயண சுற்றுலா ஆகியவை. ரோப்வே, தொங்கும் நடைபாலம், மான்கள் மறுவாழ்வு மையம், சூழ்நிலை கல்வி மையம், பொழுதுபோக்கு படகு குழாம் ஆகிய வசதிகள் இங்கு உள்ளது. இத்தலம் சுற்றுலா தளத்திற்கான குவியப்புள்ளியாக விளங்குகிறது.
சூழ்நிலை சுற்றுலா இப்பகுதியிலுள்ள வனங்களின் சுற்றுப்புறங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. செந்தூருணி வனவிலங்கு சரணாலயத்தினுள் கட்டப்பட்டுள்ள அணைக்கட்டிலிருந்து வரும் நீரினால் இங்குள்ள நீர்நிலைகள் உருவாகியுள்ளது. இச்சாரணாலயம் சூழ்நிலை சுற்றுலாவை மேம்படுத்தும் அனைத்து வளர்ச்சி வாய்ப்புகளையும் பெற்றுள்ளது.
மேலும் தென்மலையை சுற்றி 50 கிமீ சுற்று புறங்களில் சூழ்நிலை சுற்றுலா மையங்கள் உருவாகியுள்ளது. சூழ்நிலை சுற்றுலா வழியாக தென்மலை பகுதியை மேம்படுத்தும் கேரள அரசின் இது ஒரு முக்கியமான திட்டமாகும். தென்மலையில் இருந்து 100கிமீ தொலைவில் உள்ள சபரிமலையை இத்திட்டம் குறி வைத்து வகுக்கப்பட்டுள்ளது.
காரணம் லட்சக்கணக்கான பக்தர்கள் இத்தலத்திற்கு வருகிறார்கள். இவர்களின் பெரும்பாலானோர் ஆந்திர பிரதேசம், கர்நாடக, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் இருந்துதான் வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் இங்குள்ள எல்லா ஐயப்ப தலங்களையும் தரிசிக்க விரும்புவார்கள்.
புராணங்களின்படி கேரள மாநிலத்திற்குள் 5 ஐயப்ப திருத்தலங்கள் உள்ளன. குழத்துபுலா, அச்சன்கோவில், ஆரியங்காவு, சபரிமலை. ஐந்தாவது திருதலம் தற்போது பராமரிப்பு இல்லாமல் உள்ளது. இத்திருத்தலம் கந்தமலா அல்லது தேவர்மலா என்று அறியப்படுகிறது. இத்திருத்தலங்களுக்கு புனித யாத்திரை வரும் பயணிகளை கவரும் ஒரு சுற்றுலா தலமாக தென்மலை விளங்குகிறது.
ஒருநாள் மற்றும் ஒன்ருக்கும் மேற்பட்ட நாட்கள் என தென்மலை சுற்றுலா பயணம் திட்டமிடப்பட்டுள்ளது. சூழ்நிலை சுற்றுலாவை வழக்கத்தில் கொண்டுள்ள இத்தலத்தின் வளர்ச்சி கடுமையான சூழ்நிலை விதிகளை அடிப்படையாக கொண்டது. இரவு நேரங்களில் டெண்டுகலிலும், மரக்கிளைகளிலும்,குகைகளிலும், வனத்தின் உள்பகுதியில் தங்கும்போது சுற்று சூழல் பாதிக்கப்படாத வண்ணம் கவனத்தில் கொள்ளப்படும்.
மேலும் சூழ்நிலை சுற்றுலா செயல்பாடுகளை ஊக்குவிக்க ஆதிவாசிகலும், உள்ளூர்வாசிகளும் வழிகாட்டிகளாகவும், உதவியாளர்களாகவும் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
இது இச்சூழ்நிலை சுற்றுலா மையங்களுக்கும், அதை சார்ந்த இடங்களுக்கும் தேவையான வளர்ச்சி திட்டங்களுக்கு ஒரூ புதிய பரிமாணத்தை உருவாக்கிறது.. சுற்றுசூழல் பதிவு, மற்றும் மதிப்பீடு, ஆராய்ச்சிகள் இந்த பகுதியில் நடைபெறுகிறது. சுற்றுலா செயல்பாடுகளின் சுற்று சூழல் கண்காணிப்பு தொடர்ந்து நடைபெறுகிறது.
செங்கோட்டையில் இருந்து 30 கிமீ தொலைவில் உள்ள இச்சுற்றுலா தலத்தை பேரூந்து முலமும், செங்கோட்டையில் இருந்து ரயில் முலமும் சென்றடையலாம். சூழ்நிலை சுற்றுலா பயணிகள் கண்டிப்பாக கண்டு களிக்க வேண்டிய நடுத்தர மக்களுக்கு வசதியான ஒரு சுற்றுலா தலம் தென்மலை ஆகும். தென்மலை தங்கும் விடுதிக்கு அம்மாநில சுற்றுலா துறை குறிப்பிட்ட விடுதிகளை அங்கீகரித்துள்ளது.
மேலும் ஒவ்வொரு பகுதிக்கும், பயணத்திற்கும் தனி தனி கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
குற்றாலம் வரும் சுற்றுலா பயணிகள் இந்த தென்மலை சூழ்நிலை சுற்றுலா மையப்பகுதிகளையும் கண்டு களிக்கலாம்.
-
ஹோட்டல்களுக்கு குட் நியூஸ்..! 23ஆம் தேதி முதல் கூடுதல் வணிக சிலிண்டர்கள்.. மத்திய அரசு அறிவிப்பு! -
கேரளா தலையெழுத்தை தீர்மானிக்கும் "அந்த" சில ஆயிரம் வாக்குகள்.. கரையேறுமா காங்கிரஸ்? -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
Velmurugan: அதிமுகவின் "3+10" மெகா ஆஃபரால் திக்குமுக்காடிய வேல்முருகன்? திமுகவுக்கு தவாக கெடு! -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா?













Click it and Unblock the Notifications