நெல்லை நெல்லையப்பர் கோயிலில் இன்று ஆனித் தேரோட்டம்
நெல்லை: நெல்லையில் உள்ள அருள்மிகு நெல்லையப்பர் கோவிலில் இன்று ஆனித் தேரோட்டம் நடைபெற்றது.
நெல்லையப்பர்-காந்திமதி கோயிலில் ஆனிப் பெருவிழா கடந்த 27ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.
தொடர்ந்து தினமும் கோயிலில் விசேஷ பூஜைகள், தீபாரதனை, சிறப்பு நிகழ்ச்சிகள், சுவாதி வீதி உலா, பன்னிரு திருமுறை பரயாணம் நடந்து வருகிறது.
நேற்று காலை சுவாமி நடராஜ பெருமாள் வெள்ளை சாத்தி எழுந்தருளல், உட்பிரகாரம் உலா வருதல், பச்சை சாத்தி எழுந்தருளல் வீதி உலாவும், மாலையில் சுவாமி கங்காளநாதர் தங்க சப்பரத்தில் வீதி உலாவும் நடந்தது.
மாலையில் கோயில் சென்னை சுசீத்ரா குழுவினரின் பக்தி இன்னிசையை தொடர்ந்து இரவில் டாக்டர் சீர்காழி சிவசிதம்பரம் பக்தி இன்னிசை நிகழ்ச்சி நடந்தது.
தொடர்ந்து இரவில் தேர் கடாட்சம் வீதி உலா, சுவாமி தங்க கைலாச பர்வத வாகனத்திலும், அம்பாள் தங்க கிளி வாகனத்திலும் வீதி உலாவும் நடந்தது.
திருவிழாவின் 9ம் நாளான இன்று அதிகாலை 3.30 மணிக்கு சுவாமி, அம்பாள் தேரில் எழுந்தருளல், காலை 8.05 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல் நடந்தது. தொடர்ந்து 4 ரத வீதிகள் வழியாக திருத்தேர் சென்று தேர் நிலையத்திற்கு வந்தடைகிறது.
தேரோட்டத்திற்காக இன்று போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டிருந்தது. தேரோட்ட விழாவை அமைதியாவும், சிறப்பாகவும் நடத்தும் வகையில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications