புதுச்சேரியில் பிரான்ஸ் தேசிய தினம் - உற்சாக கொண்டாட்டம்
புதுச்சேரி: பிரான்ஸ் நாட்டின் 220வது தேசிய தினம், புதுச்சேரியில் உற்சாகமாக கொண்டாடப்பட்டது.
பிரெஞ்சு வசம் முன்பு இருந்த பகுதிதான் புதுச்சேரி. பின்னர் இந்தியாவுடன் இணைந்து விட்டாலும் கூட, பிரெஞ்சு தேசிய தினம் உள்ளிட்டவை இங்கும் விசேஷமாக கொண்டாடப்படுவது வழக்கம்.
புதுச்சேரிக்கான பிரெஞ்சு செயலாளர் சோலெட்டி, புதுச்சேரிக்கான பிரெஞ்சு துணைத் தூதர் ஜோயல் ராயெட் ஆகியோர் போர் நினைவுச் சின்னத்திற்குச் சென்று அங்குள்ள வீரர் சிலைக்கு அஞ்சலி செலுத்தினர்.
இந்த நினைவிடத்தை பிரான்ஸ் அரசே பராமரித்து வருவது குறிப்பிடத்த்கது.
புதுச்சேரியில் வசித்து வரும் பல்வேறு முன்னாள் பிரெஞ்சு ராணுவ, அரசு அதிகாரிகளும் இங்கு அஞ்சலி செலுத்தினர்.
பல்வேறு பிரான்ஸ் அமைப்புகள், பள்ளிக் கூடங்கள் சார்பிலும் அஞ்சலி செலுத்தப்பட்டது.
புதுச்சேரி காவல்துறையின் பான்டு வாத்தியப் பிரிவினர் புதுச்சேரி மற்றும் இந்திய தேசிய கீதங்களை இசைத்தனர்.
இதேபோல காரைக்காலிலும் பிரான்ஸ் தேசிய தினம் கொண்டாடப்பட்டது.
அது என்ன தேசிய தினம்..
பிரெஞ்சுப் புரட்சியின் தொடகத்தத்தைதான் தேசிய தினமாக பிரான்ஸ் மக்கள் கொண்டாடுகின்றனர்.
1789ம் ஆண்டு ஜூலை 14ம் தேதி பாரீஸில் உள்ள பாஸ்டில் சிறைச்சாலைக்குள் மக்கள் படையெடுத்துப் புகுந்து அங்கு அடைத்து வைக்கப்பட்டிருந்தவர்களை விடுவித்தனர்.
அன்று தொடங்கியது பிரெஞ்சுப் புரட்சி. அதை நினைவு கூறும் வகையில்தான் இந்த தேசிய தினம் (Bastille day) கொண்டாடப்படுகிறது.
-
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
அலையவிடும் ரங்கசாமி.. ஏக கடுப்பில் பாஜக எம்எல்ஏக்கள்.. இப்படி பண்ணிட்டாரே.. அமித் ஷா அப்செட்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications