குவைத் தமிழ் இஸ்லாமிய சங்க மிஃராஜ் விழா
குவைத் மிர்காப் பகுதியில் உள்ள 'மண்ணு வ ஸல்வா உணவகத்தில் நடந்த இந்த நிகழ்ச்சிக்கு உக்காஷா பள்ளிவாசலின் இமாமும், சங்கத்தின் தலைவருமான அப்துல் லத்தீஃப் காஸிமீ தலைமை தாங்கினார்.
துணைச் செயலாளர் அய்யம்பேட்டை முனீர் அஹ்மத் நிகழ்ச்சியைத் துவக்கி வைத்தார்.
சங்கத்தின் ஆலோசனை குழு உறுப்பினர் எதுமலை அப்துல் காதர், துணைத் தலைவரும், குவைத் காயிதே மில்லத் பேரவை அமைப்பாளருமான திருப்பத்தூர் டாக்டர் அன்வர் பாட்சா மற்றும் துணைத் தலைவர் கூத்தாநல்லூர் கபீர் அலீ ஆகியோர் முன்னிலை வகிக்க, ஆலோசனை குழு உறுப்பினர் திருபுவனம் ஜாஹிர் ஹுஸைன் வரவேற்புரையாற்ற நிகழ்ச்சி துவங்கியது.
சங்கத்தின் கொள்கை பரப்புக் குழு உறுப்பினர் ஜைனுல் ஆபிதீன் 'மிஃராஜ் வழங்கிய வாழ்க்கை வழிமுறைகள்' என்ற தலைப்பிலும், சங்கத்தின் பயிற்சி மற்றும் வழிகாட்டுதல் குழு உறுப்பினர் சேலம் மஹ்பூப் பாஷா ரஷாதி 'இம்மை, மறுமையின் விளைநிலம்' என்ற தலைப்பிலும் சிறப்புரையாற்றினர்.
பொதுச் செயலாளர் பரங்கிப்பேட்டை கலீல் அஹ்மத் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியதுடன், சங்கத்தின் செயற் திட்டங்கள் குறித்தும் விளக்கினார்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆண், பெண் இருபாலருக்கும் பொது அறிவுப் போட்டியும் நடந்தது. இதி்ல் வென்ற 3 ஆண்களுக்கும் 3 பெண்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.
சங்கத்தின் இணைப் பொருளாளர் புத்தாநத்தம் முஹம்மது நாஸர் நன்றியுரையாற்ற நிகழ்ச்சி நிறைவுற்றது.
இந்த நிகழ்ச்சியில் குவைத்தின் பல பகுதிகளிலிருந்தும் தமிழகம் மற்றும் இலங்கையைச் சேர்ந்த உலமாக்கள், தொழிலதிபர்கள், வியாபாரிகள், பணியாளர்கள், காயிதே மில்லத் பேரவை (குவைத் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்), முஸ்லிம் நலவாழ்வுச் சங்கம், தமிழ்நாடு முஸ்லிம் கலாச்சாரப் பேரவை (TMCA), அய்யம்பேட்டை சக்கராப்பள்ளி முஸ்லிம் ஜமாஅத், அல்-இஹ்ஸான் நற்பணி மன்றம், அல்-ஈமான் நற்பணி மன்றம், அய்யம்பேட்டை தவ்ஹீத் ஜமாஅத், தமிழோசை கவிஞர் மன்றம், குவைத் பரங்கிப்பேட்டை இஸ்லாமியப் பேரவை (KPIA) மற்றும் குவைத் நாகூர் இஸ்லாமியப் பேரவை (KNIA) ஆகிய அமைப்புகளின் உறுப்பினர்கள், குவைத் தமிழ் டாட் காம் இதழின் ஆசிரியர் குழாம் என நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர்.
சங்கத்தின் செயல்பாடுகள் குறித்து அறிந்து கொள்ள அலைபேசி எண் (+965) 97872482.
மேலும் விவரங்களுக்கு: www.k-tic.com
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?













Click it and Unblock the Notifications