கலப்புத் திருமணம் செய்தால் இலவச மின்சாரம்!
Subscribe to Oneindia Tamil

உதவித் தொகை, வேலை வாய்ப்பு, தொழில் தொடங்குவதில் கலப்பு மணம் செய்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கி வருகிறது தமிழக அரசு.
அதேபோல கலப்புத் திருமணம் செய்பவர்களின் விவசாய நிலங்கள் மற்றும் வீடுகளுக்கு ஓராண்டுக்கு இலவச மின்சாரம் வழங்க
வேண்டும் என மின்வாரியத்திற்கு அரசு உத்தரவிட்டுள்ளது.
விவசாயத்திற்கு ஒரு ஏக்கர் நிலம் வரை உள்ளவர்களுக்கு இலவச மோட்டார் இணைப்பு வழங்கவும், ஆண்டு வருமானம் 12,000 ஆகவும் 200 சதுர அடிக்குள் வீடு இருப்பவர்களுக்கும் இலவச வீட்டு மின்சாரம் வழங்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இது தவிர தமிழக அரசின் இரண்டு ஏக்கர் இலவச நிலம் வழங்கும் திட்டத்தின் கீழ், நிலம் வழங்கப்பட்டவர்களுக்கு இலவச
மின் மோட்டார் இணைப்பு வழங்கும் பணியை விரைவுபடுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications