பசுக்களை பாதுகாக்கக் கோரி 5 லட்சம் கிராமங்களில் யாத்திரை

இந்த அமைப்பின் தேசிய பொதுச் செயலாளர் திவாகர் சாஸ்திரி, தமிழக செயல் தலைவர் மாரிமுத்து, இந்து முன்னணி மாநில அமைப்பாளர் ராம.கோபாலன் ஆகியோர் நிருபர்களிடம் கூறுகையி்ல்,
பசு மாடுகளை பாதுகாக்க வேண்டும். பசுக்களை அடிப்படையாகக் கொண்ட, இயற்கை விவசாய முறைக்கு விவசாயிகள் திரும்ப வேண்டும். கிராமங்களில் விவசாயம் சார்ந்த தொழில்கள் தொடங்கப்பட வேண்டும். பசுவை தேசிய சின்னமாக அறிவிக்க வேண்டும். பசுவதை தடை செய்யப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு தழுவிய அளவில் யாத்திரை நடைபெற உள்ளது.
இந்த யாத்திரை விஜயதசமி தினமான செப்டம்பர் 28ம் தேதி, ஹரியானா மாநிலம் குருஷேத்திரத்தில் தொடங்கும். அதே நாளில் இந்தியாவின் மற்ற பகுதிகளிலும் இந்த யாத்திரை தொடங்கும்.
இந்தியா முழுவதும் 108 நாட்கள், 5 லட்சம் கிராமங்களில் இந்த யாத்திரை நடைபெறும்.
குருஷேத்திரத்தில் தொடங்கும் யாத்திரை, நாடு முழுவதும் 20,000 கி.மீ. பயணம் மேற்கொண்டு, 17.1.2010ல் நாகபுரியில் முடிவடையும்.
மேலும் பசுவை பாதுகாக்க வலியுறுத்தி இந்தியா முழுவதும் கோடிக்கணக்கான மக்களிடம் கையெழுத்துகள் பெறப்பட்டு, குடியரசுத் தலைவரிடம் அளிக்கப்படும்.
தமிழகத்தைப் பொருத்தவரை 15,000 கிராமங்களில் பசு பாதுகாப்புக் குழு அமைக்கவும், அனைத்து மாவட்டங்களிலும் யாத்திரை நடத்தவும், 50 லட்சம் மக்களிடம் கையெழுத்துப் பெறவும் திட்டமிடப்பட்டுள்ளது என்றனர்.
-
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications