குற்றாலத்தில் விஐபிக்களின் பெயரை கூறி மிரட்டினால் நடவடிக்கை - போலீஸ்
குற்றாலம்: குற்றாலத்தில் விஐபிக்களின் பெயர்களை கூறி அத்து மீறுபவர்கள் மீது போலீஸ் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
குற்றாலத்தில் காலதாமதமாக சீசன் தொடங்கியது. ஆனால் தற்போது எல்லா அருவிகளிலும் தண்ணீர் கொட்டுகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் குவிய தொடங்கியுள்ளனர்.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் காரில் வருபவர்களில் சிலர் போக்குவரத்தை ஓழுங்குபடுத்தும் போலீசாரிடம் தகராறு செய்து காரை குறிப்பிட்ட இடத்தில் நிறுத்தாமலும், அருவிகளில் முறையாக குளிக்க செலலாமல் போலீசாரிடம் நீ யார். உன் நம்பரை சொல், தொப்பியை கழற்றாமல் விடமாட்டேன் என்று கூறி போலீசாரையே மிரட்டும் நிலை ஏற்பட்டுள்ளது.
கடந்த வாரம் பழைய குற்றாலம் அருவி பகுதியில் விஐபி பெயரை கூறி அத்துமீறி சென்ற கார் விபத்துக்குள்ளாகியதுடன் அதிலிருந்த 5 பேர் பலத்த காயம் அடைந்தனர்.
இதனால் குற்றாலம் வருகின்ற பயணிகள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டதை தொடர்ந்து போலீஸ் உயர் அதிகாரிகள் விஐபி பெயரை கூறி அத்துமீறி சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டனர்.
இதையடுத்து கடந்த 2 நாட்களாக விஐபிக்களின் பெயர்களை தவறாக பயன்படுத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குடித்து விட்டு கார் ஓட்டுவது, அருவி பகுதியில் கலாட்டா செய்வது, பாதுகாப்பு போலீசாரிடம் தகராறு செய்வது, உட்பட சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இது போன்று ஐந்தருவியில் குடித்து விட்டு கலாட்டா செய்த மதுரையை சேர்ந்த வாலிபரை கைது செய்தனர். பயணிகள் மற்றும் பொதுமக்கள் போலீசாரின் இந்த நடவடிக்கைக்கு பெரிதும் பாராட்டு தெரிவித்தனர்.
-
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications