ராமநாதபுரத்தில் புறா பந்தயம்
ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில், மத்திய ராமநாதபுரம் பந்தயப் புறா சங்கத்தின் சார்பில் புறாப் பந்தயம் நடந்தது. அதில் சங்கத்தின் தலைவர் சந்திரனின் புறா முதல் பரிசைப் பெற்றது.
மத்திய ராமநாதபுரம் பந்தயப் புறா சங்கத்தினரால் பந்தயப் புறா போட்டி நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற புறாக்களுக்கான பரிசளிப்பு விழா ராமநாதபுரம் வலம்புரி மகாலில் நடைபெற்றது.
முஸ்லிம் லீக் மாவட்ட துணைச் செயலாளர் எம். லியாகத் அலிகான் தலைமை வகித்தார். ஆசிரியர் எஸ்.முத்துமணி, வழக்கறிஞர் என்.பிரேம் சதீஷ், நகை வியாபாரி ஜோதிகணேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மத்திய ராமநாதபுரம் பந்தயப் புறா சங்கத் தலைவர் எம். சந்திரன் வரவேற்றார்.
போட்டிகள் தஞ்சையிலிருந்து ராமநாதபுரம் (220 கி.மீ) விக்ரபாண்டியிலிருந்து ராமநாதபுரம் (405 கி.மீ), சென்னை முதல் ராமநாதபுரம் (520 கி.மீ), ஆந்திர மாநிலம் நெல்லூரிலிருந்து ராமநாதபுரம் (710 கி.மீ), ஆந்திர மாநிலம் விஜயவாடாவிலிருந்து ராமநாதபுரம் (1005 கி.மீ) ஆகிய பிரிவுகளில் நடத்தப்பட்டன.
விஜயவாடாவில் இருந்து ராமநாதபுரம் வரை நடந்த போட்டியில், புறா சங்கத் தலைவர் எம். சந்திரனின் புறா 25 மணி-50 நிமிடம்-05 வினாடிகளில் வந்து சேர்ந்து முதல் பரிசைப் பெற்றது.
அனைத்து போட்டிகளிலும் கலந்து கொண்டு அதிகப் புள்ளிகள் பெற்ற கே.முருகேசனின் புறாவுக்கு ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பரிசை மதுரை ரேஸிங் பீஜியன் கவுன்சில் செயலாளர் டி.வில்பிரட், ஓய்வுபெற்ற துணை ஆட்சியர் விவேகானந்தன் ஆகியோர் வழங்கினார்.
ஏற்பாடுகளை மத்திய ராமநாதபுரம் புறா பந்தய சங்கத்தின் தலைவர் எம்.சந்திரன், செயலாளர் அப்துல் சுக்கூர் உள்ளிட்ட நிர்வாகிகள் செய்திருந்தனர். பாலா நன்றி கூறினார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications