குதுப் மினாரில் ஒளி, ஒலி காட்சி-சுற்றுலா பயணிகளை கவர திட்டம்
டெல்லி: டெல்லியில் குதுப் மினாருக்கு அருகே ஒளி, ஒலி காட்சிக்கு ஏற்பாடு செய்து அதன்மூலம் சுற்றுலா பயணிகளை அதிகம் ஈர்க்க டெல்லி வளர்ச்சி ஆணையம் திட்டமிடப்பட்டுள்ளது.
தலைநகர் டெல்லியில் உள்ள மெக்ராலி பகுதியில் சுமார் 72.5 மீ உயரத்தில் இந்தியாவி்ன் பெருமை தாங்கி நிற்கும் கட்டிடம் குதுப் மினார். 12ம் நூற்றாண்டின் இறுதியில் குப்தின் ஐபெக் என்ற மன்னனால் கட்டப்பட்ட இந்த கட்டிடத்தை தினமும் சுமார் 10 ஆயிரம் சுற்றுலா பயணிகள் பார்க்கின்றனர்.
இந்நிலையில் அடுத்தாண்டு டெல்லியில் காமன்வெல்த் போட்டிகள் நடைபெற இருக்கும் வேளையில் டெல்லியின் பொலிவை உயர்த்தி, சுற்றுலா பயணிகளை அதிக கவர டெல்லி வளர்ச்சி ஆணையம் திட்டமிட்டுள்ளது. இதற்காக டெல்லி வளர்ச்சி ஆணையம், இந்திய சுற்றுலா கழகத்துடன் கைகோர்த்து செயல்பட்டு வருகிறது.
இந்த இரு அமைப்புகளுக்கு இடையே செய்யப்பட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் படி குதுப் மினார் அருகே ஒளி, ஒலி காட்சி அமைக்கப்பட இருக்கிறது. இந்த நிகழ்ச்சியின் மூலம் இந்த வரலாற்று பாரம்பரிய சின்னத்தின் சிறப்பு குறித்து சுற்றுலா பயணிகளுக்கு விவரிக்கப்பட இருக்கிறது.
இதற்கான பணியில் ஈடுபட்டு வரும் அதிகாரி ஒருவர் கூறுகையில், இந்த ஒளி, ஒலி காட்சி அமைக்கும் பணிகள் சுதந்திரமாக நடத்தப்பட இருக்கிறது. இது குதுப் மினாரை பாதுகாத்து வரும் இந்திய தொல்பொருள் துறையின் கட்டுப்பாட்டுக்குள் வராது என்றார்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications