ராமருக்கு தேள் மாலை-ஆந்திராவில் வினோத கோயில்
ஹைதராபாத்: ஆந்திராவில் உள்ள மலைராமர் கோயிலில் சுவாமிக்கு தேள் மாலை அணிவிக்கும் வினோத பழக்கம் நடைபெற்று வருகிறது.
தேங்காய், பழத்துடன் கோயிலுக்குள் போய் வருபவர்களை பார்த்து இருக்கிறோம். ஆனால், கைகளில் தேள்களுடன் கோயிலுக்குள் செல்லும் பக்தர்களை பார்க்க வேண்டும் என்றால் ஆந்திராவின் கர்னூல் மாவட்டத்தில் உள்ள கொடுமூர் மலைராமர் கோயிலுக்கு தான் போக வேண்டும்.
இங்கு வரும் பக்தர்கள் டப்பாக்களில் தேள்களை பிடித்து வருகின்றனர். பி்ன்னர் அவற்றுடன் கோயிலை மூன்று முறை சுற்றி வந்து தேள்களை மாலையாக நூலில் கோர்த்து சுவாமிக்கு அணிவித்து வணங்குகின்றனர்.
இதன்மூலம் பக்தர்கள் தங்களது விருப்பங்கள் நிறைவேறும் என்ற நம்பிக்கையில் உறுதியாக இருக்கின்றனர். இது அனைவருக்கும் உகந்த கோயில் என்றாலும் தேள்களுடன் தொடர்பு கொண்ட விருச்சக ராசி பக்தர்களுக்கு அதிக செல்வ செழிப்பும், அதிர்ஷ்டமும் அடிக்கும் என்றும் கூறப்படுகிறது.
விவரம் தெரியாத சிலர் சாமி சிலையில் தேள் கூட்டம் இருப்பதை பார்த்து ஓட்டம் பிடித்துவிடுகின்றனர். மேலும் பக்தர்கள் கொண்டு வரும் தேள்களி்ன் வரவால் இப்பகுதி முழுவதும் தேள்மயமாகிவிட்டது.
இதையடுத்து அப்பகுதியில் அங்காங்கே தேள்கள் ஜாக்கிரதை என வாசகங்களும் வைக்கப்பட்டுள்ளன.
தற்போது இந்த கோயிலுக்கு அதிக கூட்டம் வருவதால் தேள்களுக்கு கிடைப்பது அரிதாகிவிட்டது. இதையடுத்து அருகிலிருக்கும் கிராம மக்கள் தேங்காய், பழம் விற்பது போல் தேள்களை விற்று வருகின்றனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications