இன்று கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாட்டம் - ஜெ. வாழ்த்து

மகாவிஷ்ணு எடுத்த 9வது அவதாரம்தான் கிருஷ்ணர். பூமியில் கிருஷ்ணராக மகா விஷ்ணு பிறப்பெடுத்த தினமே கிருஷ்ண ஜெயந்தியாக கொண்டாடப்படுகிறது.
கோகுலாஷ்டமி, ஸ்ரீ ஜெயந்தி, கிருஷ்ண ஜெயந்தி என்று பல்வேறு பெயர்களால் இது அழைக்கப்படுகிறது.
கிருஷ்ண ஜெயந்தியையொட்டி நாடு முழுவதும் கோலாகல கொண்டாட்டங்கள் களை கட்டியுள்ளன. தமிழகத்திலும் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டங்கள் விசேஷமாக உள்ளன.
பள்ளிகள், கல்லூரிகளில் பிரமாண்ட கிருஷ்ணர் படங்கள், மகா விஷ்ணுவின் 10 அவதாரங்களை படங்களாக வரைதல், உறியடி விழா நடத்துதல் என கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
பல பள்ளிகளில் சிறார்களுக்கு கிருஷ்ணர் வேடமிட்டு கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன.
ஜெ. வாழ்த்து
கிருஷ்ண ஜெயந்தியையொட்டி அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தி..
பூமியில் மகாவிஷ்ணு கிருஷ்ணராக அவதரித்த நாள் கிருஷ்ண ஜெயந்தி திருநாளாக கொண்டாடப்படுகிறது. இதையடுத்து மக்களுக்கு எனது நல்வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் வாழ்வில் இயல்பாக அமைந்துள்ள கடமைகளை முழுமையாக செய்ய வேண்டும் என்பதை மிக உயர்ந்த தர்மம் என்னும் தத்துவத்தை பகவத் கீதை மூலம் உபதேசித்த கிருஷ்ணன் பிறந்த நாளில் இந்த உலகம் உயர்வடைய அனைவரும் பிரார்த்திப்போம்.
மனிதன் மனிதனாக மட்டுமல்லாமல் மற்ற மனிதனுக்காகவும் வாழ வேண்டும் என்ற உன்னத தத்துவதை நமக்கு அருளிய நலம் தரும் நாராயணன் அருளால் அனைவரது வாழ்க்கையும் சிறக்கட்டும். இருள் மறைந்து ஒளி மலரட்டும்.
எங்கெங்கும் மகிழ்ச்சி பொங்கட்டும். குழிதோண்டிப் புதைக்கப்பட்டுள்ள ஜனநாயகம் மலரட்டும் என மனமார வாழ்த்துகிறேன் என ஜெயலலிதா கூறியுள்ளார்.
-
எல்லா பிரச்சனைக்கும் நான் காரணமா.. வாடகை பேச்சாளர்கள் இப்ப பேசுங்க.. வரிந்து கட்டிய லீமாரோஸ் -
என்னப்பா அங்க சத்தம்.. ஆக்ஷனில் இறங்கிய ’ஷா’! சரண்டரான அதிமுக தலைகள்! பஞ்சாயத்து முடிந்தது எப்படி? -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்! -
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்!












Click it and Unblock the Notifications