ஷெய்கு சதகத்துல்லாஹ் அப்பா நினைவு இஸ்லாமியத் தமிழ் இலக்கியப் பரிசு போட்டி
சென்னை: சீதக்காதி அறக்கட்டளையின் இஸ்லாமிய ஆய்வுப் பண்பாட்டு மையம் செய்கு சதகத்துல்லாஹ் அப்பா நினைவு இஸ்லாமியத் தமிழ் இலக்கியப் பரிசு 2010 க்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
ஆண்டுதோறும் வழங்கப்பெறும் இப்பரிசு தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த நூலுக்கு ரூ.30,000 வழங்கப்படும்.
இவ்வாண்டு அரபுத்தமிழ்- தோற்றம்- வளர்ச்சி- தேக்கம் ( அரபுத்தமிழ் இலக்கிய வரலாறு ) எனும் தலைப்பில் நூல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.
நூல்கள் ஏ4 அளவில், கணினி அச்சில் இடம் விட்டு, 200 பக்கங்களுக்கு குறையாமல் இருத்தல் வேண்டும். புத்தகமாக அச்சிட்டால் 22 செமீ x 14 செமீ டெம்மி புத்தக அளவு, 200 பக்கங்களுக்குக் குறையாமலும் இருக்க வேண்டும்.
தாளில் ஒரு புறம் தட்டச்சு செய்தோ அச்சடித்தோ அனுப்பப் பெறுதல் வேண்டும். தட்டச்சு செய்த நூலாயினும், அச்சிட்ட நூலாயினும் தேர்வுக்கு ஐந்து படிகள் அனுப்பப் பெறுதல் வேண்டும்.
தேர்வுக்குரிய நூல்கள் 31.03.2010 க்குள் சீதக்காதி அறக்கட்டளைக்கு வந்து சேர வேண்டும். நடுவர் குழுவினரால் தேர்ந்தெடுக்கப்படும் நூலுக்குப் பரிசு ரூ. 30,000 வழங்கப்படும்.
தேர்வில் சமநிலை ஏற்படுமாயின் பரிசுத்தொகை பகிர்ந்தளிக்கப்படும். தேர்வுக்கு வரும் நூல்கள் எதுவும் நடுவர் குழுவினரால் தேர்ந்தெடுக்க முடியாத நிலையில் அமையுமானால் அப்பரிசுத் தொகையைப் பழம்பெரும் தமிழ் எழுத்தாளர் ஒருவருக்கு வழங்க ஆட்சிக்குழு முடிவெடுக்கலாம்.
தேர்வுக்கு வரும் படிகள் திருப்பி அனுப்ப இயலாது 2010ம் ஆண்டு ஜுன் மாதம் 21 ஆம் தேதி நடைபெறும் ஷெய்கு சதகத்துல்லாஹ் அப்பா நினைவு விழாவில் பரிசு வழங்கப்பெறும். மேலதிக விபரங்களுக்கு செயலாளர், சீதக்காதி அறக்கட்டளை,இஸ்லாமிய ஆய்வுப் பண்பாட்டு நிலையம், எண் 6, மாடல் ஸ்கூல் ஆயிரம் விளக்கு, சென்னை 600 006. தொலைபேசி: 2829 7335.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications