ஸ்வைன் பீதி-பெங்களூரில் அதிகரிக்கும் ஹோம் டெலிவரி
பெங்களூர்: பெங்களூரில் ஹோட்டல்களில் இருந்து உணவு பொருட்களை ஹோம் டெலிவரிக்கு ஆர்டர் செய்யும் முறை அதிகரித்து வருகிறது. பன்றி காய்ச்சல் பீதி காரணமாக மக்கள், கூட்டமான இடங்களுக்கு செல்வதை தவிர்க்கும் முயற்சியாக இது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
பன்றி காய்ச்சல் இந்தியாவில் வேகமாக பரவி வருவதால் மக்கள் பீதியடைந்துள்ளனர். அதுவும் வெளிநாட்டுக்கு மக்கள் அடிக்கடி சென்று வரும் பெங்களூர் போன்ற நகர மக்களிடம் இந்த பயம் கொஞ்சம் அதிகமாகவே இருக்கிறது.
இதனால் இவர்கள் ஹோட்டல்கள், பப்கள் போன்றவற்றுக்கு போவதை கூடுமானவரை தவிர்த்து வருகின்றனர். அவர்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் புக் செய்து ஹோம் டெலிவரி மூலம் உணவுக்கு ஆர்டர் கொடுத்துவிடுகின்றனர்.
இது குறித்து ஹங்கிரிஜோன்.காம் என்ற பிரபல உணவு இணைய தளத்தின் துணை நிறுவனர் ரிதேஷ் திவேதி கூறுகையில்,
கடந்த இரண்டு வார காலமாக ஹோம் டெலிவரி செய்யும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை சுமார் 10 சதவீதத்துக்கு மேல் அதிகரித்துள்ளது. ஆனால், ஹோட்டலுக்கு வரும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையும் குறையவில்லை.
மேலும், வணிக வளாகங்களில் உள்ள ரெஸ்டாரன்ட்களில் கூட்டம் நிரம்பி வழிகின்றன. மற்ற இடங்களில் உள்ள நடுத்தர ஹோட்டல்களில் சாப்பிட்டு வந்த மக்கள் தான் பன்றி காய்ச்சல் பரவலாம் என ஹோம் டெலிவரி செய்து வருகின்றனர் என்றார்.
வெட்ஹபா என்ற உணவு இணையதளத்தின் நிறுவனர் அஜய் என்பவர் கூறுகையில்,
பன்றி காய்ச்சல் பரவாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தற்போது ஹோம் டெலிவரி அதிகரித்துள்ளது. சில இடங்களில் ஹாஸ்டலில் தங்கியிருக்கும் தங்களது மகன்களுக்கு உணவை சப்ளை செய்யுமாறு சில பெற்றோர்களும் எங்கள் ஆர்டர் வழங்கி வருகின்றனர் என்றார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications