நெல்லையில் அரவாணிகள் மடிகட்டும் பூஜை
நெல்லை: விழுப்புரத்தை போல் நெல்லையில் நேற்று இரண்டு அரவாணிகளுக்கு மடிகட்டும் விழா மற்றும் நிர்வாண பூஜை நடத்தப்பட்டது. இந்த விழாவில் சுமார் 200க்கும் மேற்பட்ட அரவாணிகள் கலந்து கொண்டனர்.
விழுப்புரம் அருகே அரவாணிகளுக்கு கூத்தாண்டவர் விழா நடப்பது போல நெல்லையில் நேற்று அரவாணிகளுக்கு மடிகட்டும் விழா நடந்தது.
நெல்லை சந்திப்பு ஆர்கேவி திருமண மண்டபத்தில் இந்த விழா நடந்தது. இதில் சுமார் 200 அரவாணிகள் கலந்து கொண்டனர். இரவு 10 மணி அளவில் இந்த நிகழ்ச்சி தொடங்கியது.
முன்னதாக நெல்லையை சேர்ந்த 2 அரவாணிகள் தங்களை முழு பெண்ணாக மாற்றிக் கொள்வதற்காக மும்பை சென்று அறுவை சிகிச்சை செய்துள்ளனர். அதன் பின்னர் தற்போது தான் முதன்முறையாக நெல்லை வந்தனர்.
அவர்களுக்காதான் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. அவர்களை மும்பையை சேர்ந்த அரவாணிகள் நிலா, ஜோதி ஆகியோர் தங்களுடன் அழைத்து வந்திருந்தனர். அந்த 2 அரவாணிகளையும் நெல்லை அரவாணிகள் சங்க தலைவி சுமதியிடம் ஒப்படைத்து அவர்களுக்கு நள்ளிரவில் மடிகட்டும் விழா பூஜை நடந்தது.
நள்ளிரவு 1.30 மணி அளவில் மண்டபத்தின் அனைத்து ஜன்னல்கள், கதவுகளை மூடிவிட்டு இந்த பூஜை நடந்தது. பூஜையை அரவாணிகள் சங்க தலைவி சுமதி, மும்பையை சேர்ந்த நிலா, ஜோதி ஆகியோர் நடத்தினார்கள்.
அவர்கள் புதிதாக அறுவை சிகிச்சை செய்து கொண்ட 2 அரவாணிகளையும் நிர்வணமாக அமர வைத்து எண்ணை, மஞ்சள், தண்ணீர், பால் ஊற்றி பூஜை நடத்தினார்கள். அப்போது மற்ற அரவாணிகள் கூடியிருந்து கும்மி அடித்து சடங்கு சம்பிரதயங்களை கடைபிடித்தனர்.
இன்று அதிகாலை 3 மணிக்கு பூஜைகள் முடிந்தது. பூஜை நடத்தப்பட்ட அரவாணிகள் பால்குடம் எடுத்துகொண்டு நெல்லை தாமிரபரணி ஆற்றுக்கு சென்றனர். அங்கு ஆற்றில் பால் ஊற்றி பூஜையை நிறைவு செய்தனர்.
பூஜையில் கலந்து கொள்ளும் அனைத்து அரவாணிகளுக்கும் செல்வம் பெருகும் என அவர்கள் நம்புவதால் ஏராளமான அரவாணிகள் கலந்து கொண்டனர். நெல்லையில் இது போன்ற பூஜைகள் நடத்தப்படுவது இதுவே முதல் முறை.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications