ஜெசிகா பியல்-நம்பர் 1 'வைரஸ்' ஸ்டார்!
சைபர் உலகின் மிகவும் அபாயகரமான நட்சத்திரம் என்ற பெருமை முன்பு பிராட் பிட்டிடம் இருந்தது. இப்போது அதை பியல் தட்டிப் பறித்துள்ளார்.
இன்டர்நெட் பாதுகாப்பு நிறுவனமான மெக்காஃபீ நடத்திய கணிப்பில் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
27 வயதாகும் ஜெசிகா பியல், 7வது சொர்க்கம் என்ற டிவி நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர். இவரது பெயரில்தான் தற்போது இன்டர்நெட்டில் ஏகப்பட்ட வைரஸ் புரோகிராம்கள் உலா வந்து கொண்டுள்ளனவாம். ஐந்து வைரஸ் புரோகிராம்களில் ஒன்று பியல் பெயரைத் தாங்கி வருகிறதாம்.
இதுகுறித்து மெக்காஃபீயின் ஜெப் க்ரீன் வெளியிட்டுள்ள அறிக்கையில், நட்சத்திரங்கள், பிரபலங்களின் பெயர்களில் வைரஸ்களை உலா விடுவது இப்போது அதிகரித்து விட்டது. அப்படி விட்டால்தான் நிறையப் பேர் ஏமாந்து போய் வருவார்கள் என்பது அவர்களின் எண்ணம்.
அதிலும் ஹாலிவுட் நட்சத்திரங்களுக்கு இருக்கும் பாப்புலாரிட்டியை இவர்கள் சரியாக பயன்படுத்திக் கொண்டு அவர்களின் பெயர்களில் வைரஸ்கள், மால்வேர் உள்ளிட்டவற்றை அனுப்பிக் கொண்டே இருக்கின்றனர். இதனால் கம்ப்யூட்டர்கள் பாதிப்படைந்து அவற்றைப் பயன்படுத்துவோர் பெரும் இழப்பை சந்திக்க நேரிடுகிறது.
கிம் கர்தர்ஷியான், ரிஹானா, பிராட் பிட், ஏஞ்செலீனா ஜூலி, மேகான் பாக்ஸ் உள்ளிட்டோரின் பெயர்களில் ஏகப்பட்ட மால்வேர், வைரஸ் புரோகிராம்கள் வெளியாகிய வண்ணம் உள்ளன. இவர்களின் பெயர்களில் இன்டர்நெட்டில் உலா வரும் ஸ்கிரீன் சேவர், ரிங்டோன் போன்றவற்றை உள்ளடக்கிய தளங்களுக்குப் போனால் அங்கு வைரஸ்தான் கொட்டிக் கிடக்கும்.
குறிப்பாக பாப் பாடகி பியான்ஸ் பெயரில் ரிங்டோன்கள் டவுன்லோடு செய்யும் தளங்கள் உள்ளன. ஆனால் இவற்றில் பெரும்பாலானவை வைரஸ்தான்.
எங்களது கருத்துக் கணிப்புப் பட்டியலில் ஜெனீபர் அனிஸ்டனுக்கு 3வது இடம் கிடைத்துள்ளது. அனிஸ்டன் பெயரில் ஸ்கிரீன் சேவர்கள் நிறைய வலம் வருகின்றன. ஆனால் பெரும்பாலானவை வைரஸ்கள்தான்.
மைலி சைரஸ், ஆஷ்லே டிஸ்டேல், லின்ட்சே லோஹன் ஆகியோருக்கும் பட்டியலில் இடம் கிடைத்துள்ளது.
மேகான் பாக்ஸ், ஜூலி ஆகியோர் 8வது இடத்தில் இணைந்து உள்ளனர்.
4வத இடத்தில் டாம் பிராடியும், 6வது இடத்தில் கிஸெல் பன்ட்செனும் உள்ளனர்.
ஒபாமாவுக்கு 34- மிஷலுக்கு 39
அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவுக்கு இந்தப் பட்டியலில் 34வது இடம் கிடைத்துள்ளது. அவரது மனைவி மிஷல் 39வது இடத்தில் உள்ளார்.
பிராட் பிட்டுக்கு இம்முறை 10வது இடம்தான் கிடைத்துள்ளது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்













Click it and Unblock the Notifications