கும்பமேளா-விளக்கும் புதிய இணையதளம்

Subscribe to Oneindia Tamil

Kalpavasi
பெங்களூர்: கும்பமேளா குறித்த அனைத்து தகவல்களையும் உள்ளடக்கிய ஒரு புதிய இணையத் தளத்தை (kalpavasi.com) ஸ்டூடியோராமா நிறுவனம் துவக்கியுள்ளது.

உலகின் மாபெரும் விழாவான கும்பமேளா 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறுகிறது. இந்துக்களின் புனித விழாவான இது தொடர்பாக சாஸ்திர மற்றும் சுற்றுலா தொடர்பான திட்டங்களை கையாண்டு வரும் ஸ்டுடியோராமா இந்தியா லிமிடெட் நிறுவனம் கல்பவசி.காம் (kalpavasi.com) என்ற புதிய இணையத் தளத்தை துவக்கியுள்ளது.

புனித நீராடலின் மகத்துவத்தை விளக்குவதோடு மட்டுமல்லாமல் அறிவியலுக்கும், கும்பமேளாவுக்கும் இடையிலான தொடர்பை தெளிவாக எடுத்துரைக்கிறது. இந்த விவரங்களைத் திரட்ட கடந்த 10 ஆண்டுகளாக இந்திய ஆய்வாளர்கள், சமூக ஆராய்ச்சியாளர்கள், வரலாற்று அறிஞர்கள், அகழ்வாராய்ச்சியார்கள் அடங்கிய டீம் பாடுபட்டுள்ளது.

இது குறித்து ஸ்டூடியோராமா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மணிஷ் மோட்சகுண்டம் கூறுகையில், இளைஞர்களின் ஒத்துழைப்போடும், மூத்தவர்களின் ஆசிர்வாதத்தோடும் இந்திய கலாச்சாரத்தை பரப்பும் முயற்சி தான் இந்த இணையத் தளம் என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+