மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு நிரந்தர வணிகக் கூடம்
சென்னை: மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு பயனளிக்கும் வகையில் ரூ. 14 கோடி செலவில் கட்டப்பட்டு வரும் வணிககூடம் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் திறக்கப்படும் என துணை முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது சுற்றுலா பயணிகள் அதிகம் வரும் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே அமைக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் சென்னை மைலாப்பூர் கற்பகாம்பாள் திருமண மண்டபத்தில் நவராத்திரி விழா விற்பனை கண்காட்சியை ஸ்டாலின் துவக்கி வைத்தார். இந்த கண்காட்சியில் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களை சேர்ந்த மகளிர் சுய உதவி குழுவினர்களால் கடைகள் வைக்கப்பட்டுள்ளன.
இந்த கண்காட்சி வரும் அக்டோபர் 1ம் தேதி வரை தினமும் காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை நடக்கிறது.
பின்னர் நிருபர்களிடம் ஸ்டாலின் பேசுகையில்,
மகளிர் சுய உதவிக் குழுவினரின் தயாரிப்புகளை விற்பனை செய்ய மாநில மற்றும் மாவட்ட அளவில் கண்காட்சிகள் நடத்தப்படுகின்றன. கடந்த ஆண்டு இந்த கண்காட்சி மூலம் ரூ. 91 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் விற்பனை செய்யப்பட்டன.
இந்த ஆண்டும் அனைத்து மாவட்டத்தை சேர்ந்த கடைகளும் இடம்பெற்றுள்ளது. இவர்கள் தயாரிக்கும் பொருட்களை விற்பனை செய்வதற்காக சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே ரூ. 14 கோடியில் வணிக வளாகம் கட்டப்பட இருக்கிறது. இது மார்ச் மாதம் திறக்கப்படும் என்றார்.
-
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்! -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
அமைச்சர் ராஜ்மோகன் கையால் பட்டம் வாங்க மறுத்து மாணவர் செய்த செயல்! சென்னை கல்லூரியில் நடந்த பரபரப்பு -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை












Click it and Unblock the Notifications