புதுபொலிவு பெறும் கட்டபொம்மன் நினைவிடம்-ரூ. 23 லட்சம் ஒதுக்கீடு
தூத்துக்குடி: வீரபாண்டிய கட்டபொம்மனின் நினைவிடம் புதுபொலிவு ஜொலிக்க தமிழக அரசு ரூ. 23 லட்சம் நிதி ஒதுக்கியுள்ளது.
இந்திய சுதந்திர வரலாற்றில் ஆங்கிலேயருக்கு எதிராக சீற்றம் கொண்டு பொங்கி எழுந்த முதல் மாவீரர்களில் வீரபாண்டிய கட்டபொம்மனும் ஒருவர்.
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே ஆங்கிலேயரால் அவர் தூக்கிலிடப்பட்ட இடத்தை தமிழக அரசு அவரது நினைவிடமாக மாற்றியுள்ளது.
ஆனால், இந்த நினைவிடம் கடந்த சில ஆண்டுகளாக பராமரிக்கப்படாமல் விடப்பட்டதாக சமூக ஆர்வலர்கள் மற்றும் பொது மக்கள் குற்றம்சாட்டினர்.
இதையடுத்து தமிழக அரசு கட்டபொம்மன் நினைவிடத்தை பராமரிக்க ரூ.23 லட்சம் ஒதுக்கி உத்தரவிட்டுள்ளது. தற்போது இந்த பணிகள் வெகு ஜோராக நடந்து வருகிறது.
நினைவிடத்தின் பின்புறம் 50 சென்ட் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், ரூ.3.5 லட்சம் செலவில் சுற்றுச்சுவர், ரூ.9 லட்சம் செலவில் ஹைமாஸ் விளக்கு, 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட நீர்த்தேக்க தொட்டி அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
சிலை வளாகத்துக்குள் இருக்கும் குறுகிய நடைபாதையை, அகலமானதாக மாற்றப்படுகிறது. ரூ.6.5 லட்சம் செலவில் சிறுவர்களுக்கான பூங்காவும் அமைக்கப்படுகிறது. மேலும், செயற்கை புல்வெளி, அலங்கார விளக்குகள், புதிய இருக்கைகள் அமைக்கும் பணிகளும் நடந்து வருகிறது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications