கோடீஸ்வரர் பட்டியலில் பில்கேட்ஸ் மீண்டும் முதலிடம்
நியூயார்க்: அமெரிக்க கோடீஸ்வரர்கள் கடந்த ஆண்டில் மட்டும் இழந்துள்ள தொகை 300 பில்லியன் டாலர்கள் என ஃபோர்ப்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
நம்பர் ஒன் கோடீஸ்வரராக இருந்த வாரன் பஃபே கடந்த 12 மாதங்களில் மட்டும் 10 பில்லியன் டாலர் நஷ்டத்தைச் சந்தித்துள்ளார். இதனால் பெரும் நிதி நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளார் அவர்.
இந்த ஆண்டின் 400 டாப் அமெரிக்க பணக்காரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது ஃபோர்ப்ஸ் பத்திரிகை.
இதில் முதலிடத்தில் இருப்பவர் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ். இவருடைய நிகர சொத்து மதிப்பு 50 பில்லியன் டாலர்கள்.
இவருக்கு அடுத்த இடத்தில் இருப்பவர் வாரன் பஃபே. ஆரக்கிள் நிறுவனர் லாரன்ஸ் எல்லிசன் 3 வது இடத்தில் உள்ளார். பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சி நடத்துநர் ஓபரா வின்ப்ரே 14வது இடத்தில் உள்ளார். அவர் கடந்த ஆண்டு மட்டும் 400 மில்லியன் டாலர்களை இழந்துள்ளார்.
அமெரிக்காவின் முதல் 400 பணக்காரர்களின் சொத்து மதிப்பு மதிப்பு மொத்தம் 1.57 ட்ரில்லியன் டாலர்களாக இருந்தது. ஆனால் இந்த ஆண்டு அது 1.27 ட்ரில்லியனாகக் குறைந்துவிட்டது. அமெரிக்க வரலாற்றில் பணக்காரர்களின் சொத்து மதிப்பு இந்த அளவு குறைந்திருப்பது இதுவே முதல்முறையாகும் என அந்தப் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
பொதுவாக 1.3 பில்லியன் அளவுக்கு சொத்து இருப்பவர்கள்தான் ஃபோர்ப்ஸ் 400 பட்டியலுக்குள் நுழைய முடியும். ஆனால் பொருளாதார மந்தம் காரணமாக இந்த விதி, 950 மில்லியன் டாலர் சொத்திருந்தாலே பட்டியலுக்குள் இடம்பெறலாம் என திருத்தப்பட்டது.
ஃபோர்ப்ஸ் 400 பட்டியலில் இந்த ஆண்டு இடம்பிடித்துள்ள புதுமுகம் பெர்னார்டு மேடாஃப். ஆயிரக்கணக்கான மக்களை ஏமாற்றி பணம் குவித்து மாட்டிக்கொண்டு இப்போது கம்பி எண்ணிக்கொண்டிருக்கும் அதே மேடாஃப்தான்...
-
நியூயார்க் மயானத்தில் பூமிக்கு அடியில் 56 லட்சம் தேனீக்கள்! உலக அதிசயமாக மாறிய கல்லறைத் தோட்டம் -
அமெரிக்காவில் 30 இந்தியர்கள் கைது.. உடனடியாக நாடுகடத்த உத்தரவு "Operation Checkmate".. என்ன நடந்தது? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications