தமிழக சுற்றுலாத்துறையின் இணையதள சுற்றுலா
சென்னை: தமிழக அரசின் சுற்றுலாத் துறை தனது இணையதளம் மூலமாக விர்ச்சூவல் டூர் எனப்படும் இணைய சுற்றுலாவைத் தொடங்கியுள்ளது.
சுற்றுலாத்துறை செயலாளர் இறையன்பு இதைத் தொடங்கி வைத்தார்.
சுற்றுலாத்துறையின் இணையதளமான www.tamilnadutourism.org என்ற தளத்தில் இதைப் பார்க்கலாம்.
தஞ்சாவூர் பெரிய கோயில், மதுரை மீனாட்சி அம்மன் கோயில் உள்ளிட்ட முக்கிய 11 சுற்றுலா இடங்கள் குறித்த புகைப்படங்களை இதில் பார்த்து ரசிக்கலாம்.
இதுகுறித்து இறையன்பு கூறுகையில்,
இந்த இணையச் சுற்றுலாவில் முதற்கட்டமாக வண்டலூர் உயிரியல் பூங்கா, மாமல்லபுரம் நினைவுச் சின்னங்கள், தஞ்சை பெரிய கோயில், மதுரை மீனாட்சி அம்மன் கோயில், கொல்லிமலை, ராமேஸ்வரம் கோயில், குற்றால அருவி, கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை உள்ளிட்ட 11 சுற்றுலா தலங்களின் புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
இந்தப் புகைப்படங்கள், அந்த சுற்றுலா தலத்தை முழுமையாக அறியப் பயன்படுகிறது. இப்புகைப்படக் காட்சிகள் இணையதளத்தில் தொகுக்கப்பட்டுள்ளன.
இதில் உள்ள காட்சிகளை மவுஸ் மூலம் 360 டிகிரி சுற்று கோணத்தில் நாம் விரும்பும் வகையில் தத்ரூபமாகக் கண்டு மகிழலாம்.
கோவில் சுவர்களில் உள்ள கல்வெட்டுகளைக்கூட பெரிதுபடுத்தி குளோஸ்-அப் காட்சியில் காணலாம்.
கொல்லிமலை, வண்டலூர் விலங்குகள் பூங்கா உள்ளிட்ட இடங்களைக் காண கிளிக் செய்தால் போதும். சில விநாடிகளில் கணினித் திரையில் வண்ணக் கோலத்தில் நம் முன்பு காட்சிகள் விரியும்.
சென்னை தீவுத்திடலில் இப்போது நடைபெறும் உணவுத் திருவிழாவின் ஒரு பகுதியாக, இந்த இணையச் சுற்றுலா குறித்த புகைப்படங்கள் பார்வையாளர்களுக்கு காண்பிக்கப்படும்.
விரைவில் 50 சுற்றுலா தலங்களின் புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியிடப்படும் என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications