பொது இடத்தில் 'தம்' - ஒரே ஆண்டில் ரூ. 12 லட்சம் அபராதம் வசூல்
டெல்லி: பொது இடங்களில் புகை பிடிக்க விதிக்கப்பட்ட பின்னர் கடந்த ஒரு ஆண்டு காலத்தில் தமிழகத்தில் தான் அதிகபட்சமாக ரூ. 12 லட்சம் அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு அக்டோபர் 2ம் தேசப்பிதா காந்தி பிறந்த நாளன்று நாடு முழுவதும் பொது இடங்களில் புகை பிடிக்க அப்போதைய சுகாதார துறை அமைச்சர் அன்புமணி ராமதாஸ் தடை கொண்டு வந்தார்.
இந்நிலையி்ல் சமீபத்தில் இந்திய சுகாதார சங்கம் என்ற தன்னார்வ நிறுவனம் தகவல் பெறும் உரிமை சட்டம் மூலம் புகை பிடிக்க தடை விதிக்கப்பட்டது குறித்து தகவல்களை கேட்டார்.
இதற்கு பதிலளிக்கும் வகையில் மத்திய சுகாதாரதுறை வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கடந்த அக்டோபர் 2, 2008 முதல் இந்த ஆண்டு செப்டம்பர் பாதி வரையில் டெல்லியில் 46 ஆயிரத்து 531 பேரிடம் அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது. பொது இடங்களில் புகை பிடிப்பவர்களுக்கு தலா ரூ. 200 வசூல் செய்யப்படுகிறது.
நாட்டிலே டெல்லியில் தான் அதிகம் பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டிருந்தாலும், அபராத தொகை வசூலில் தமிழகம் முதலிடத்தில் இருக்கிறது. இங்கு 10 ஆயிரத்து 979 பேரிடம் சுமார் ரூ. 12.6 லட்சம் அபராத தொகை கிடைத்துள்ளது.
டெல்லியில் தனி நபர்களிடமும், சென்னையில் நிறுவனங்களிலும் அதிக அளவில் அபராதம் விதிக்கப்பட்டிருக்கலாம். இதனால் தான் வருமானத்தில் வேறுபாடு ஏற்பட்டுள்ளது.
ஆந்திராவில் ரூ. 1.4 லட்சமும், கர்நாடகாவில் 2500 பேரிடம் ரூ. 1.15 லட்சமும் வசூலிக்கப்பட்டுள்ளது. மிசோரத்தில் 1200, கேரளாவில் 1,173 மற்றும் கோவாவில் 250 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கண்டுகொள்ளாத ராஜஸ்தான்...
ஆனால், ராஜஸ்தான் மாநிலத்தில் இந்த சட்டத்தை யாரும் ஒரு பொருட்டாக மதிப்பதில்லை என்பது தெரியவந்துள்ளது. அங்கு மாதத்துக்கு ஒருவர் மீது கூட அபராதம் விதிக்கப்படவில்லை. ஒரு ஆண்டில் வெறும் 9 பேருக்கு மட்டும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
உத்தர பிரதேசத்தில் 21 பேருக்கு அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications