ஜோக் அருவியில் சிக்கிய 8 சுற்றுலா பயணிகள் மீட்பு
ஷிமோகா: இந்தியாவின் மிக உயரமான நீர்வீழ்ச்சி என்ற பெயருடைய கர்நாடக மாநிலத்தின் ஜோக் அருவியில் சிக்கி கொண்ட 8 சுற்றுலா பயணிகளை போலீஸார் பத்திரமாக மீட்டனர்.
கர்நாடக மாநிலம் ஷிராவதி நதி பகுதிகளில் கடந்த பல நாட்களாக கடும் மழை பெய்து வருகிறது. இதையடுத்து அப்பகுதியில் உள்ள லிங்கன்மக்கி அணை நிறைந்து வழிகிறது.
அணையிலிருந்து வெளியேறும் வெள்ள நீர் அதிகரித்ததை அடுத்து ஜோக் அருவிப் பகுதியில் வெள்ள பெருக்கு ஏற்பட்டது.
ஷாராவதி ஆறு ஜோக் நீர்வீழ்ச்சிப் பகுதியில் வரும்போது நான்கு கிளைகளாகப் பிரிந்து கிட்டத்தட்ட 800 அடி உயரத்திலிருந்து அருவியாக கொட்டுகிறது. இந்தப் பகுதிக்கு முங்காரு மலே என்று பெயர். இந்த இடத்திற்கு பெருமளவில் சுற்றுலாப் பயணிகள் வருவது வழக்கம்.
ஷாராவதி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கை அறியாத 8 சுற்றுலா பயணிகள் முங்காரு மலே பகுதியில் சிக்கிக் கொண்டனர். தகவல் அறிந்ததும் போலீஸார் மீட்பு குழுவினருடன் சென்று அவர்களை காப்பாற்றினர்.
அந்த பயணிகள் 8 பேரும் தாவணகரே மாவட்டம் ஹரிஹார் பகுதியை சேர்ந்தவர்கள்.
இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில்,
இது போல் அருவியின் மேல் பகுதிக்கு சென்று சுற்றுலா பயணிகள் மாட்டி கொள்வது இது முதல் முறை அல்ல. எட்டாவது முறை. அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டு விட்டனர் என்றார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications