சென்னையில் 'ஐடியல் டேலன்ட் ஹன்ட்'-தூர்தர்ஷனில் ஒளிபரப்பு
சென்னை: சென்னையில் இந்தியன் மியூசிக் அகாடமி நடத்தும் டேலன்ட் ஹன்ட் எனப்படும் இசையில் ஆர்வம் கொண்டவர்களை கண்டறியும் நிகழ்ச்சி வரும் 10ம் தேதி நடத்தப்பட இருக்கிறது. இதை தூர்தர்ஷனில் ஒளிபரப்பு செய்யப்பட இருக்கிறது.
இந்தியன் மியூசிக் அகாடமி ஜடியல் ஜல்சா என்ற பெயரில் சண்டிகர், கொல்கத்தா, சென்னை, போபால், மும்பை, நாக்பூர் ஆகிய 6 நகரங்களில் திறமையான கலைஞர்களை கண்டறியும் நிகழ்ச்சியை நடத்துகிறது.
சண்டிகரில் கடந்த மாதம் 26ம் தேதியும், கொல்கத்தாவில் 3ம் தேதியும் இந்த நிகழ்ச்சி முடிந்த நிலையில், அடுத்த ஐடியல் ஜல்சா சென்னையில் வரும் 10ம் தேதி நடக்கிறது. சென்னை அண்ணா சாலையில் உள்ள தென் இந்திய திரைப்பட வர்த்தக மையத்தில் வைத்து காலை 9 மணிக்கு துவங்குகிறது.
இசையில் ஆர்வம் கொண்ட 5 முதல் 45 வயதுள்ளவர்கள் இதில் கலந்து கொள்ளலாம். பங்கேற்க விருப்பம் உள்ளவர்கள் 99410 16640 என்ற மொபைல் எண்ணில் தங்களது பெயர் மற்றும் விபரங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும். மேலும் விபரங்களுக்கு www.imaindia.in இணையத்தை பார்க்கலாம்.
இதில் கர்நாடக, இந்துஸ்தானி, வாய்பாட்டு இசை கலைஞர்கள், கஜல், பஜன், சுபி, காவாலி போன்ற பாரம்பரிய இசை தெரிந்தவர்களும் பங்கேற்கலாம். இந்த நிகழ்ச்சியின் மூலம் இந்திய இசையில் ஆர்வத்தை வளர்க்க இந்தியன் மியூசிக் அகாடமி முயற்சித்து வருகிறது.
இந்த போட்டியில் ஒவ்வொரு நகரிலும் தலா 3 பேர் தேர்வு செய்யப்பட இருக்கின்றனர். வெற்றியாளர்களுக்கு உதவி தொகை வழங்கப்பட இருக்கிறது.
இந்த நிகழ்ச்சி தூர்தர்ஷன் சேனலில் ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமை காலை 10.30 மணி முதல் 11.00 வரை ஒளிபரப்பாக வருகிறது. தூர்தர்ஷன் சஹாயத்ரி டிவியில் மாலை 5.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.
-
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
83 வயதில் இசைஞானி இளையராஜாவின் காப்பி ரைட்ஸ் போராட்டம்.. இளைஞர்கள் அறிய வேண்டிய பாடம் -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications