திருப்பதி சுற்றுலா முன்பதிவு ரத்து-தேவஸ்தானம் அதிரடி
சென்னை: திருப்பதி கோவில் சேவை நிகழ்ச்சிகளை முன்பதிவு செய்து தரிசக்க மேற்கொள்ளப்பட்ட ஏற்பாடுகளை சில உள்ளூர் நிறுவனங்கள் தவறாக பயன்படுத்துவதாக எழுந்த புகாரை அடுத்து முன்பதிவு வரும் 18ம் தேதி முதல் ரத்து செய்யப்படுவதாக திருப்பதி திருமலை தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
திருப்பதி ஏழுமலையான் திருக்கோவிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அதில் ஒன்று தான் சிறப்பு சேவைகளை முன்பதிவு செய்து காணும் வசதி.
இதில் முன்பதிவு செய்பவர்கள் திருப்பதி மற்றும் திருச்சானூரில் நீண்ட நேரம் காத்திருக்காமல் குறிப்பிட்ட நேரத்தில் சுவாமி தரிசனம் பெறலாம் என்பதால் இதற்கு ஏகப்பட்ட கிராக்கி ஏற்பட்டு வருகிறது.
இந்த முன்பதிவு திட்டப்படி தினமும் நடைபெறும் செல்லூலார் தரிசனம் மற்றும் அர்ச்சனானந்தாரா சேவையை காண மொத்தமாக 1250 டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்படுகின்றன.
இவற்றில் 900 ஆந்திரா சுற்றுலா, 150 ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம், 100 தமிழ்நாடு சுற்றுலா கழகத்துக்கு அளிக்கபடுகிறது. இந்திய சுற்றுலா நிறுவனம் மற்றும் இந்தியன் விமான நிறுவனத்துக்கு தலா 50 டிக்கெட்டுகள் முன்பதிவுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அவர்கள் தங்களது திட்டத்துக்கு ஏற்ப பல்வேறு பேக்கேஜ்களில் பயணிகளை திருப்பதிக்கு அழைத்து வந்தனர். தங்கும் இடம், உணவு ஆகியவையும் இதில் அடங்கிவிடும் என்பதால் பக்தர்கள் எந்த சுமையும் இல்லாமல் சாமி தரிசனம் பெற்று வந்தனர்.
இந்நிலையில் சில உள்ளூர் நிறுவனங்கள் இந்த டிக்கெட்டை வாங்கி கூடுதல் விலைக்கு விற்று லாபம் சம்பாதிப்பதாக திருப்பதி திருமலை தேவஸ்தான நிர்வாகத்துக்கு தொடர்ந்து புகார் வந்த வண்ணம் இருந்தது.
மேலும், இந்த திட்டத்தின் மூலம் தேவஸ்தானத்துக்கு கூடுதல் லாபம் வந்தாலும் சாதாரண மக்கள் பல மணி நேரம் கூடுதலாக காத்திருந்து தரிசனம் பெறுவதாகவும், அவர்கள் மிகவும் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர் என்றும் குற்றச்சாட்டு எழுந்தது.
இதை அனைத்தையும் கருத்திஸ் கொண்ட தேவஸ்தானம் முன்பதிவு முறையை வரும் 18ம் தேதி முதல் ரத்து செய்வதாக அறிவித்துள்ளது. மேலும் இந்த சேவைகளுக்கான கட்டணத்தை வரும் 21ம் தேதி ரூ. 100லிருந்து ரூ. 300 ஆக உயர்த்த போகிறது.
இந்த அறிவிப்பின் காரணமாக ஐஆர்டிசி, தமிழக சுற்றுலா, ஆந்திர சுற்றுலா, இந்திய சுற்றுலா நிறுவனங்கள் பெரிதும் பாதிக்கப்ப்டடுள்ளன. அந்த நிறுவனங்கள், தேவஸ்தானம் தங்களது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளன.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications