பட்டாசு வாங்கி காசை கரியாக்காதீர்கள்:ஏழைகளுக்கு உதவுங்கள்-கடலூர் கலெக்டர்!
கடலூர்: மக்கள் வெடிகளுக்கு செலவிடும் பணத்தை ஏழை, எளியவர்களுக்கு கொடுத்து உதவுமாறும் கடலூர் மாவட்ட கலெக்டர் சீதாராமன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை அதிக ஒலி எழுப்பும் பட்டாசு வகைகளை வெடிக்க உச்ச நீதிமன்றம் தடை விதித்து உள்ளது.
125 டெசிபல் ஒலி அளவுக்கு மேல் ஒலிஎழுப்பும் வெடிகள் செவிகளைச் சேதப்படுத்தும். மேலும் தீபாவளி நாளன்று வாணவேடிக்கை மற்றும் பட்டாசுகளைக் கொளுத்தும் பொதுமக்கள், அதிக ஒலி எழுப்பும் பட்டாசுகளை வெடிக்க வேண்டாம். இது குழந்தைகள் மற்றும் வயதானோருக்கு சுகாதாரக் கேடு மற்றும் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தும்.
பட்டாசுகளை வெடிக்கும் போது அவற்றில் இருந்து வெளிவரும் ரசாயனங்கள், சுற்றுச் சூழலை மாசுபடுத்துகிறது. இதனால் கண் எரிச்சல், சுவாசக் கோளாறு, நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்கள் ஏற்படுகின்றன.
எனவே, வெடிகளுக்குச் செலவிடும் பணத்தை ஏழைக் குழந்தைகளுக்கு பாடப் புத்தகங்கள், ஆடைகள் வாங்க உதவினால் நல்ல பலன் தரும்.
தீபாவளிப் பண்டிகையை ஒலிமாசு ஏற்படுத்தும் பட்டாசுகளைத் தவிர்த்து, வண்ணமிகு ஒளிதரும் பட்டாசுகளை குறைந்த அளவில் உபயோகித்து வழக்கமான உற்சாகத்துடன் ஒலிமாசற்ற பண்டிகையாக கொண்டாடி சுற்றுச் சூழலைக் பாதுகாப்போம் என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications