திரையுலக திறமையை ஒருங்கிணைக்க ஒரு மேடை!
பெரும்பாலும் திறமையாளர்கள் முடங்கிக் கிடக்க, அரைகுறைகள் அதிர்ஷ்டக் காற்றில் கோபுரத்தில் ஏறிவிடுவதும் உண்டு. இதற்குக் காரணம் திறமைசாலிகளும், அவர்களைத் தேடிக் கொண்டிருப்பவர்களும் சந்திக்காமலேயே போய்விடுவதுதான்.
இனியும் அப்படி ஒரு நிலை நீடிக்கக் கூடாது என்பதற்காகவே துவங்கப்பட்டுள்ளதுதான் வி ஃபைன்ட் யு (www.vfindu.com).
முழுக்க முழுக்க இலவச சேவையாக இந்த தளத்தை துவக்கியிருக்கிறார், மனோரஞ்சன். அடிப்படையில் இவர் ஒரு திரைப்படத் தயாரிப்பாளரும் கூட. விரைவில் தமிழில் புதிய படங்களைத் தயாரிக்கும் திட்டத்திலுள்ள இவர் நியூஸிலாந்து குடியுரிமைப் பெற்ற ஒரு இந்தியர்.
இந்த தளம் ஆரம்பித்ததன் பின்னணி, திறமைசாலிகளுக்கு இது எந்த அளவுக்கு பயன்படப்போகிறது என்பது குறித்து மனோரஞ்சனிடமே கேட்டோம்.
"எந்தத் துறையில் திறமைசாலியாக இருந்தாலும், இந்த வலைதளத்துக்குள் தன்னைப் பதிவு செய்து கொள்ளலாம். நடிப்பு, இயக்கம், தொழில் நுட்பம், மாடலிங், மேஜிக், மியூசிக், டான்ஸ், மற்றும் கலை சார்ந்த எந்த துறையிலும் உள்ள திறமைசாலிகள் இதில் தங்களை இணைத்துக் கொள்ளலாம். வெறும் போட்டோகிராப் மட்டுமே இடம் பெற்றால் போதும் என்றில்லாமல் இதில் வீடியோவையும் இணைத்துள்ளோம். தங்கள் திறமைகளை வீடியோவாக பதிவு செய்தும் இதில் இடம் பெற வைக்கலாம்.
இது மாத்திரமல்ல... கேரளா போன்ற இயற்கை எழில் கொஞ்சும் பகுதிகளில் இருப்பவர்கள் தங்களுக்கு சொந்தமான இடங்களையோ, வீடுகளையோ வாடகைக்கு தர விருப்பம் இருந்தாலும் புகைப்படம்/ வீடியோ இணைப்புடன் இதில் பதிவு செய்யலாம். விடுமுறையை கழிக்க இந்தியா வர விரும்பும் வெளிநாட்டினர் கூட, எங்கள் வெப்சைட் மூலம் இவர்களை தொடர்பு கொண்டு தங்கள் தங்குமிடத்தை பதிவு செய்து கொள்ளலாம்.
அட குடிசை வீடாக இருந்தாலும் பரவாயில்லை. அதற்கும் கணிசமான வாடகை கிடைக்க வாய்ப்புள்ளது.
உதாரணத்திற்கு தன்னிடம் ஒரு புகழ் பெற்ற தலைவர் பயன்படுத்திய ஏதோ ஒரு பொருள் இருப்பதாக வைத்துக் கொள்வோம். அதை விற்க நினைத்தால் கூட அந்த பொருளின் புகைப்படத்துடன் இதில் பதிவு செய்யலாம். நினைத்ததை விட அதிக விலைக்கு அந்த பொருளை வெளிநாட்டினருக்கோ, அல்லது நமது நாட்டை சேர்ந்தவர்களுக்கோ விற்க உதவுமில்லையா?" என்கிறார் மனோரஞ்சன்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!













Click it and Unblock the Notifications