உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுக்கு அலுவலகம் தேர்வு

Subscribe to Oneindia Tamil

Coimbatore Office
கோவை: கோவையில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுக்கான அலுவலகத்திற்கு கட்டடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

தமிழக அரசின் சார்பில் கோவையில் ஜூன் 24ம் தேதி முதல் 27ம் தேதி வரை உலகத் தமிழ் செம்மொழி மாநாடு நடைபெறுகிறது.

இதற்கான தனி அலுவலராக அலாவுதீனும், ஒருங்கிணைப்பாளராக டாக்டர் எஸ்.பிரபாகரனும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தற்போது மாநாட்டுப் பணிகளை மேற்கொள்வதற்கான அலுவலகம் பார்க்கப்பட்டுள்ளது. கோவை அரசு சுற்றுலா விருந்தினர் மாளிகை அருகில் உள்ள அரசு மருத்துவமனையின் டீன் பங்களா இதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளது.

நன்கு விசாலமாகவும், பார்க்கிங்கிற்கு தேவையான இடம் மற்றும் அரசு விருந்தினர் மாளிகையின் அருகில் இருப்பதால் வி.ஐ.பிக்களை சந்திக்கவும், அவர்கள் வந்து செல்வதற்கு வசதியாகவும் இருக்கும் என்பதாலும், பொதுமக்களுக்கு எளிதில் அடையாளம் கண்டுகொள்ளும் இடத்தில் இருப்பதாலும் இந்த பங்களா தேர்வு செய்யப்பட்டுள்ளது.

கோவை அரசு மருத்துவமனை டீன் தங்குவதற்காக இந்த பங்களா முன்பு கட்டப்பட்டது. ஆனால் முன்பு டீனாக இருந்த கலாநிதிக்குப் பின்னர் யாரும் இங்கு தங்குவதில்லை.

அதையடுத்து அந்த பங்களாவை உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டு அலுவலகமாக பயன்படுத்திக்கொள்வது பற்றி தற்போதைய டீன் குமரனிடம் கேட்கப்பட்டது. அரசு அனுமதியுடன் தாராளமாக பயன்படுத்தலாம் என அவர் அனுமதி அளித்தார். இதையடுத்து தனி அலுவலர் அலாவுதீன், கோவை கலெக்டர் உமாநாத், தனி பொறுப்பு அதிகாரி டாக்டர் எஸ்.பிரபாகரன் ஆகியோர் பங்களாவை பார்வையிட்டனர்.

மாநாட்டு பணிகளை மேற்கொள்வதற்காக தனியாக ஊழியர்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர். பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றும் அரசு ஊழியர்கள் இதில் இடம் பெறுவார்கள். இது தவிர குழு அமைப்பு பணிகளும் நடைபெற்று வருகிறது.

கோவையில் அமைக்கப்படும் தனி அலுவலகத்தில் பணியாற்றுவதற்காக ஊழியர்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டு அரசின் பரிந்துரைக்கு அனுப்பப்பட்டு உள்ளது.

மாநாட்டுப் பணிகளுக்காக 2 தாசில்தார், 2 துணை தாசில்தார், 2 உதவியாளர்கள், ஒரு இளநிலை உதவியாளர், 2 தட்டச்சர்கள், 3 அலுவலக உதவியாளர்கள், 2 டிரைவர்கள், ஒரு கணக்கு பிரிவு அதிகாரி, ஒரு கணக்கு பிரிவு உதவியாளர் ஆகியோர் தேவை என கேட்கப்பட்டு உள்ளது. இதுதவிர 2 வாகனமும் வேண்டும் என தனி பொறுப்பு அதிகாரியிடம் இருந்து அரசுக்கு வேண்டுகோள் வைக்கப்பட்டு உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+