செம்மொழி மாநாடு-கோவை கொடிசியா அரங்கு தேர்வு
Subscribe to Oneindia Tamil

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,
2010ம் ஆண்டு ஜுன் 23ம் தேதி முதல் 27ம் தேதி வரை 5 நாட்களுக்கு உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு கோவை மாநகரில் நடைபெறவுள்ளது.
அதற்குத் தகுதியான இடத்தைத் தேர்வு செய்வது தொடர்பாக முதல்வர் கருணாநிதி கடந்த 6ம் தேதி கோவை மாநகருக்குச் சென்றபோது, 'கொடிசியா" எனப்படும் கோவை மாவட்ட சிறுதொழில் முனைவோர் சங்கத்திற்குச் சொந்தமான அரங்குகளையும், அதனைச் சுற்றியுள்ள இடங்களையும் பார்வையிட்டார்.
கோவை மாவட்ட அமைச்சர்கள் மற்றும் தலைமைச் செயலாளர் உள்ளிட்ட அலுவலர்களுடன் கலந்தாலோசனை செய்தார்.
அதன் அடிப்படையில், உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டிற்குக் கோவை 'கொடிசியா" அரங்கு தகுதியான இடம் என்று முதல்வர் தேர்வு செய்துள்ளார் என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications