இடிந்த பெர்லின் சுவர்..இணைந்த இதயங்கள்..!

கிழக்கு ஜெர்மனி என்றும் மேற்கு ஜெர்மனி என்றும் முன்பு ஜெர்மனி பிரிந்து கிடந்தது. பெர்லின் நகருக்கு நடுவேயும் அதைப் பிரித்து பிரமாண்ட சுவரும் எழுப்பபட்டிருந்தது.
இந்த நிலையில் 20 ஆண்டுகளுக்கு முன்பு, 1989ம் ஆண்டு நவம்பர் 9ம் தேதி பெர்லின் சுவர் இடிக்கப்பட்டது. ஐரோப்பிய நாடுகளில் பரவிய புரட்சி கிழக்கு ஜெர்மனி அரசையும் நெருக்கடியில் தள்ளியது.
இதையடுத்து கிழக்கு ஜெர்மனியில் இருப்பவர்கள் மேற்கு ஜெர்மனிக்கும், மேற்கில் இருப்பவர்கள் கிழக்குக்கும் வரலாம் என கிழக்கு ஜெர்மனி அரசு அறிவித்தது.
இதையடுத்து பெர்லின் நகரின் இரு பகுதிகளிலும் வசித்த மக்கள் அலைகடலென திரண்டு வந்து சுவரின் ஒரு பகுதியை இடித்து மறு பகுதிக்குச் சென்று கொண்டாடினர். அதன் பின்னர் சுவர் முழுமையாக இடிக்கப்பட்டது.
அந்த நாளின் 20வது ஆண்டு தினம் பெர்லினில் நேற்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. பல்வேறு நாட்டுத் தலைவர்கள் உள்ளிட்ட 1 லட்சம் பேர் இதில் கலந்து கொண்டனர்.
ஜெர்மனியின் மறு இணைப்புக்கு அடையாளமாக விளங்கும் பிரன்டன்பர்க் கேட் முன்பு இதுதொடர்பான நிகழ்ச்சி நடந்தது.
ஜெர்மன் சான்சலர் ஏஞ்செலா மெர்கல் இந்த கேட் முன்பு நின்றபடி உலகத் தலைவர்களை வரவேற்றார். இங்கிலாந்து பிரதமர் கார்டன் பிரவுன், பிரான்ஸ் அதிபர் நிக்கோலஸ் சர்கோஸி, ரஷ்ய அதிபர் டிமிட்ரி மெத்வதேவ், அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹில்லாரி கிளிண்டன் ஆகியோர் இதில் கலந்து கொண்டனர்.
இவர்கள் தவிர முன்னாள் சோவியத் அதிபர் மிகயீல் கார்பசேவ், முன்னாள் போலந்து அதிபர் லே வலேசா ஆகியோரும் நிழ்ச்சியில் கலந்து கண்டனர்.
கிழக்கு ஜெர்மனியில் மக்கள் புரட்சி தீவிரமடைய இந்த இரு தலைவர்களும் முக்கியக் காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.
சுவரின் கதை...
1961ம் ஆண்டு கிழக்கு ஜெர்மனி அரசு, 155 கிலோமீட்டர் தூரத்திற்கு இந்த சுவரை கட்டியது. இதன் மூலம் ஜெர்மனிக்கும், பெர்லினுக்கும் இடையே இரும்புத் திரை போட்டு மூடப்பட்டது.
கிழக்கு ஜெர்மனியிலிருந்து பெருமளவிலான மக்கள் மேற்கு ஜெர்மனிக்குத் தப்பிப் போவதை தடுப்பதற்காக இந்த சுவரை கிழக்கு ஜெர்மனி அரசு கட்டியது.
இந்த சுவர் கட்டப்பட்ட பின்னரும் கூட பலர் தப்பிப் போக முயன்றனர். ஆனால் அப்படித் தப்பிச் செல்ல முயன்று, கிழக்கு ஜெர்மனி படையினரால் 136 கிழக்கு ஜெர்மானியர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications