ஷார்ஜாவில் சர்வதேச புத்தகக் கண்காட்சி
ஷார்ஜா எக்ஸ்போ சென்ட்ரில் நடக்கும் இந்த கண்காட்சியை ஷார்ஜா ஆட்சியாளர் டாக்டர் சுல்தான் பின் முஹம்மது அல் காஸிமி கடந்த புதன்கிழமை துவக்கி வைத்தார்.
இதில் காஸிமி தனது சுயசரிதை நூலையும் வெளியிட்டார். இந்நிகழ்வில் மும்பை பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் டாக்டர் எஸ்.டி. கர்னிக் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
இக்கண்காட்சியில் உலகமெங்கிருந்தும் 618 புத்தக வெளியீட்டாளர்கள் பங்கேற்றுள்ளனர். இவற்றில் 440 அரபு புத்தக வெளியீட்டாளர்களும், 178 வெளிநாட்டு புத்தக வெளியீட்டாளர்களும் 23 அரபு நாடுகளிலிருந்தும், 26 வெளிநாடுகளிலிருந்தும் பங்கேற்றுள்ளனர்.
இக்கண்காட்சியில் 110,000 தலைப்புகளில் நூல்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
இக்கண்காட்சியில் கேரளாவைச் சேர்ந்த பல்வேறு புத்தக நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன. தமிழகத்தைச் சேர்ந்தவரால் அமீரகத்தில் நடத்தப்பட்டு வரும் அல் முத்தனபி புத்தக நிலையம் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் இக்கண்காட்சியில் பங்கேற்றுள்ளன.
இக்கண்காட்சியினைக் காண புத்தக ஆரவலர்கள் பலர் ஆர்வமுடன் பங்கேற்றுள்ளனர்.
புதன்கிழமை மாலை நடைபெற்ற சிறப்பு இலக்கிய நிகழ்வில் மலையாள எழுத்தாளர் சுகந்த குமாரி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
இக்கண்காட்சி நவம்பர் 21ம் தேதி வரை நடைபெறும். வாரநாட்களில் காலை 10 மணி முதல் மாலை 10 மணி வரை நடைபெறும்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?













Click it and Unblock the Notifications