கார்த்திகை- அகல் விளக்கு தயாரிப்பு தீவிரம்
நெல்லை: கார்த்திகை மாதம் பிறந்ததை ஓட்டி நெல்லை, மேலப்பாளையம் குறிச்சியில் அகல் விளக்குகள் செய்யும் பணி தீவிரமடைந்துள்ளது.
50 காசு முதல் ரூ.30 வரையிலான அகல் விளக்குகளை பொதுமக்கள் தங்கள் வீடுகளில் வழிபாட்டிக்குக்காக கடைகளில் வாங்கி வருகின்றனர்.
கார்த்திகை மாதத்தில் இந்துகள் தங்கள் வீடுகளில் தீபமேற்றி வழிபாடு செய்வது வழக்கம். இவ்வாண்டு கார்த்திகை மாதம் செவ்வாய்கிழமையில் பிறந்ததால் கடந்த வெள்ளிக் கிழமை முதலே சிலர் தங்கள் வீடுகளில் தீபமேற்றி இறைவழிபாடு நடத்தி வருகின்றனர்.
கார்த்திகை மாத பிறப்பை ஓட்டி பலரும் கடைகளுக்கு சென்று வண்ண, வண்ண அகல் விளக்குகளை வாங்கி செல்கின்றனர். இந்நிலையில் மேலப்பாளையம் குறிச்சியில் அகல்விளக்குகள் செய்யும் பணி இரவு, பகலாக நடந்து வருகிறது.
காதிகிராப்ட் நடத்தி வரும் மண்சூளைக்கு கீழே குறிச்சியில் பல தொழிலாளர்கள் இப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 5 மில்லி விளக்கு 50 காசுக்கும், 10 மில்லி விளக்கு 65 காசுக்கும், இங்கு உற்பத்தி செய்யப்பட்டு மொத்த விற்பனைக்கு வழங்கப்பட்டு வருகிறது.
ஐந்து முனைகள் கொண்ட பஞ்சமர விளக்கு ரூ.3க்கும், லட்சுமி, பிள்ளையார் உருவம் பொறிந்த விளக்குகள் ரூ.30க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த மொத்த விற்பனையாளர்களிடம் இருந்து அகல் விளக்குகளை பெரும் சில்லரை வியாபாரிகள் அதில் வர்ணம் பூசி 5 விளக்கு ரூ.10 என பொதுமக்களுக்கு அளிக்கின்றனர்.
வரும் டிசம்பர் 1ம் தேதி கார்த்திகை தீபதிருநாள் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி மேலும் அகல்விளக்குகள் விற்பனை சூடு பிடிக்கும் என வியாபாரிகள் தெரிவித்து வருகின்றனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications