நீரில் நனையாத பைபிள் அறிமுகம்
Subscribe to Oneindia Tamil
கொச்சி: நீரில் நனையாத வாட்டர் புரூஃப் பைபிள் தற்போது மார்க்கெட்டில் அறிமுகமாகி உள்ளது.
'இம்மர்ஸ் பைபிள்' என்ற பெயரில் அறிமுகமாகியுள்ள இந்த புத்தகம், 261 பக்கங்கள் கொண்டது. ஒவ்வொரு பக்கமும் மெல்லிய பிளாஸ்டிக் உறையால் மூடப்பட்டுள்ளது. எனினும் மொத்த பைபிளும் 1.5 செ.மீ பருமனில் அடங்கிவிடுகிறது.
இதன் அகலம் 11.5 செ.மீ, நீளம் 16 செ.மீ.
இந்த பைபிளின் விலை ரூ.290.
சீனாவில் தயாரிக்கப்பட்ட இந்த பைபிளை, டெக்ஸாசில் உள்ள தாமஸ் நீல்சன் நிறுவனம் வெளியிடுகிறது.
இந்தியாவில் ஒ.எம் புக்ஸ் நிறுவனத்தார் விநியோக உரிமை பெற்றுள்ளனர். முன்னதாக 'பிளிப் பைபிள்', 'பர்ஸ் பைபிள்' போன்ற வித்தியாசமான பைபிள்களை ஓம் புக்ஸ் விற்பனை செய்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications