கலாமுடன் எமிரேட்ஸ் தமிழ்ச் சங்க நிர்வாகிகள் மஸ்கட்டில் சந்திப்பு
Subscribe to Oneindia Tamil

நவம்பர் 20ம் தேதி மஸ்கட்டில் உள்ள இன்டர்கான்டினென்டல் ஹோட்டலில் தங்கியிருந்த கலாமை நிர்வாகிகள், தமிழ்ப் பிரதிநிதிகள் சந்தித்தனர்.
அவரிடம், தமிழ்ச் சங்கத்தின் செயல்பாடுகளை விவரித்தனர். தமிழ்ச் சங்கம் செய்து வரும் சேவைகள், பணிகளை அவருக்கு விவரித்தனர். அதைக் கேட்டு கலாம் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார். அவர்களது எதிர்கால முயற்சிகளுக்கு தனது ஆசியும், ஆதரவும் உண்டு என்று கூறி மகிழ்ந்தார்.
மேலும் அனைவருக்கும், அனைவரின் குடும்பத்தினருக்கும், குழந்தைகளுக்கும் தனது வாழ்த்துக்களையும் கலாம் தெரிவித்துக் கொண்டார்.












Click it and Unblock the Notifications