சபரிமலை கோவிலில் பூஜை கட்டணம் குறைப்பு
Subscribe to Oneindia Tamil

புதிய் கட்டண முறைப்படி, ரூ.301ஆக இருந்த கணபதி ஹோமத்துக்கு இனி ரூ.150 மட்டுமே வசூலிக்கப்படும். பகவதி சேவைக்கான கட்டணம் ரூ.1500ல் இருந்து ரூ.800 ஆக குறைக்கப்பட்டுள்ளது.
புஷ்பாபிஷேகத்துக்கான கட்டணம் ரூ.1500 ஆகவும், களபாபிஷேகம் ரூ.25 ஆயிரத்தில் இருந்து ரூ.2 ஆயிரமாகவும், அஷ்டாபிஷேகம் ரூ.3401ல் இருந்து ரூ.1500 ஆகவும், லட்சார்ச்சனை கட்டணம் ரூ.50 ஆயிரத்தில் இருந்து ரூ.3 ஆயிரம் ஆகவும், சகஸ்ர கலசபூஜை கட்டணம் ரூ.1 லட்சத்து 10 ஆயிரத்து ஒன்றில் இருந்து ரூ.19 ஆயிரமாகவும் குறைக்கப் பட்டு உள்ளது.
புஷ்பாபிஷேகத்துக்கான பூக்களை வழிபாடு நடத்துவோர் வழங்க வேண்டும். லட்சார்ச்சனை, களபாபிஷேகம் ஆகியவற்றுக்கான பொருட்களையும் பக்தர்கள் கோவிலுக்கு வழங்க வேண்டும்.












Click it and Unblock the Notifications