தஞ்சையை கலக்கிய இட்லி போட்டி
தஞ்சாவூர்: தஞ்சையில் இட்லி தயாரிக்கும் வித்தியாசமான போட்டி நடந்தது. இதில் நூற்றுக்கணக்கான பெண்கள் கலந்து கொண்டு வகை வகையான இட்லிகளைத் தயாரித்து அசத்தினர்.
இட்லி தென்னகத்தின் முக்கிய உணவு என்பது அனைவருக்கும் தெரியும். குறிப்பாக தமிழகத்திலும், கர்நாடகத்திலும் இட்லி இல்லாமல் சிற்றுண்டி முழுமை பெறாது.
பார்க்க தம்மாத்தூண்டாக இருந்தாலும் அனைவரையும் அடிமையாக்கி வைத்துள்ள அட்டகாமான டிஷ் இது.
இந்த நிலையில், இந்திய பயிர் பகுப்பாய்வு தொழில்நுட்ப கழகம் (Indian Institute for Crop Processing Technology - IICPT) என்ற நிறுவனம் இட்லி குறித்த ஆராய்ச்சில் இறங்கியுள்ளது. இதற்காக அந்த நிறுவனம் ஒரு இட்லி அவிக்கும் போட்டியை தஞ்சையில் நடத்தியது.
இதற்கு நூற்றுக்கணக்கான பெண் போட்டியாளர்கள் வந்து குவிந்து விட்டனர். உலக அளவில் இட்லியை மார்க்கெட்டிங் செய்து உலகமயமாக்கும் நோக்கிலேயே இந்த இட்லி போட்டி வைக்கப்பட்டது.
போட்டியில் கலந்து கொண்டவர்கள் இட்லி வைக்கத் தேவையான மாவு உள்ளிட்டவற்றை கொண்டு வந்து கலந்து கொண்டனர். இட்லி சட்டி உள்ளிட்டவற்றையும் அவர்களே கொண்டு வந்தனர்.
போட்டியை சுவாரஸ்யமாக்க பலவிதமான பரிசுகளும் கூட அறிவிக்கப்பட்டிருந்தன.
பரிசைத் தட்டிச் செல்ல வேண்டும் என்பதற்காக பெண்கள் விதம் விதமான இட்லிகளை அவித்து அசத்தினர்.
இதுகுறித்து போட்டியில் கலந்து கொண்ட இல்லத்தரசி கவிதா என்பவர் கூறுகையில், தமிழகத்தின் மிக முக்கிய உணவு இட்லி. இதில் ஆய்வு என்பது பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது. சர்வதேச அளவுக்கு இட்லி எடுத்துச் செல்லப்படுவது மகிழ்ச்சி தருகிறது.
தரமான இட்லிகளைத் தயாரித்து கொடுக்க ஆர்வமாக உள்ளோம். இதன் மூலம் சர்வதேச தரத்தில் இட்லியை உருவாக்க முடியும் என்றார்.
ஐஐசிபிடி அமைப்பின் இணைச் செயலாளர் அஜீத் குமார் கூறுகையில், இட்லியை தரமாக்க வேண்டிய கட்டம் வந்துள்ளது. இதன் மூலம் நாட்டின் எந்தப் பகுதியிலும் ஒரே தரத்துடன், ஒரே சுவையுடன் விற்பனை செய்ய முடியும்.
இட்லியை பலரும் பல விதமாக தயாரிக்கிறார்கள். ஒரே மாதிரியான தரக்கட்டுப்பாடு இதில் இல்லை. அதை மாற்றி இதற்கும் ஒரு தரத்தை நிர்ணயிப்பதன் மூலம் இந்தியா மட்டுமல்லாது உலக நாடுகளுக்கம் இட்லியை கொண்டு செல்ல முடியும்.
இட்லிக்கு நமது நாட்டில் மிகப் பெரிய மார்க்கெட் உள்ளது. இதை உணர வைக்கவும், தரத்தை உருவாக்கவுமே இந்தப் போட்டி என்றார்.
எண்ணை கலப்பில்லாத தென்னிந்திய உணவு இட்லி என்பது மிக முக்கியமானது. உடலுக்கு எந்தவகையான பக்க விளைவுகளையும் இது ஏற்படுத்தாது, உடல் நலம் குன்றியவர்களுக்கு தமிழகத்தில் பரிந்துரைக்கப்படும் ஒரே உணவு இட்லி என்பதும் முக்கியமானது.
இப்படிப்பட்ட இட்லி சர்வதேச அளவில் மார்க்கெட்டிங் செய்யப்படவுள்ளது என்பது இட்லிப் பிரியர்களுக்கு நிச்சயம் சந்தோஷமான செய்திதான்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications