சிவகாசியின் பெயரை எண் கணிதப்படி மாற்ற கோரி பிரசாரம்!

குட்டி ஜப்பான் என அழைக்கப்படுவது சிவகாசி. இது ஆங்கிலத்தி்ல் 'Sivakasi' என்று இப்போது அழைக்கப்படுகிறது. ஆனால் சமீப காலமாக சிவகாசி பட்டாசுத் தொழிற்சாலைகளில் தொடர்ந்து ஏற்பட்ட விபத்துக்களில் பலர் உயிரிழந்ததைத் தொடர்ந்து எண் கணிதப்படி (நியூமராலஜி) சிவகாசி என்ற பெயரை ஆங்கிலத்தில் 'Sivakaasi' என மாற்ற வேண்டும் என கோரிக்கை எழுந்தது.
இதையடுத்து நகராட்சியில் சமீபத்தில் 'Sivakaasi' என்று பெயர் மாற்றிடக் கோரி ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்தத் தீர்மானத்தை அரசுக்கும் அனுப்பி வைத்துள்ளனர். இந்த நிலையில் இந்த பெயர் மாற்றத்தை வலியுறுத்தி பிரசார இயக்கமும் தொடங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து நகராட்சித் தலைவர் ராதிகா செல்வி கூறுகையில், இந்த பெயர் மாற்ற முடிவு சில காலமாகவே நிலுவையில் இருந்து வந்தது. தற்போதுதான் இதை தீர்மானமாக நிறைவேற்றி அரசுக்கு அனுப்பி வைத்துள்ளோம்.
எனக்கு தனிப்பட்ட முறையில் எண் கணிதத்தில் நம்பிக்கை இல்லை என்றாலும் கூட மக்களின் உணர்வுகளை நான் மதிக்கிறேன். அதனால்தான் இந்த தீர்மானத்திற்கு ஆதரவு கொடுத்து நிறைவேற்ற உதவினேன்.
தற்போது பெயர் மாற்றம் தொடர்பாக பிரசார இயக்கமும் தொடங்கப்பட்டுள்ளது என்றார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications