பழைய தகவல்களுடன் நீண்ட தூக்கத்தில் சட்டசபை வெப்சைட்!
சென்னை: தமிழக அரசின் அதிகாரப்பூர்வ இணையதளம் படு பக்காவாக இருக்கும் நிலையில், சட்டசபையின் இணையதளம் பழைய தகவல்களுடன் நீண்ட தூக்கத்தில் இருக்கிறது.
தமிழக அரசின் வெப்சைட் சமீபத்தில் புத்தம் புதுப் பொலிவுடன் படு ஜோராக மாற்றப்பட்டது. அத்தனை தகவல்களும் அழகாக அப்டேட் செய்யப்பட்டு, மக்களுக்கு உதவும் பல்வேறு முக்கிய சேவைகளுடன் மாற்றியமைக்கப்பட்டது.
ஆனால் இதற்கு நேர் மாறாக சட்டசபையின் இணையதளம் தூங்கி வழிகிறது. பல முக்கியமான தகவல்கள், மாற்றங்களைக் கூட மேற்கொள்ளாமல் அப்படியே பழைய தகவல்களுடன் படுத்துக் கிடக்கிறது சட்டசபை வெப்சைட்.
உதாரணத்திற்கு முதல்வர் கருணாநிதி வசம் இருந்த பல துறைகள் ஸ்டாலினுக்கும், பிற அமைச்சர்களுக்கும் மாற்றப்பட்டது. ஆனால் அந்த மாற்றங்கள் சட்டசபை இணையதளத்தில் செய்யப்படவில்லை.
மு.க.ஸ்டாலின் துணை முதல்வராகி சில மாதங்களாகிறது. ஆனால் சட்டசபை இணையதளத்தைப் பொறுத்தவரை இன்னும் அவர் உள்ளாட்சித் துறை அமைச்சராகவே இருக்கிறார்.
துரைமுருகன் வசம் இருந்த பொதுப்பணித்துறை பறிக்கப்பட்டு பல மாதங்களாகிறது. இப்போது அவர் வெறும் சட்ட அமைச்சர் மட்டுமே. ஆனால் இன்னும் அவர் பொதுப்பணித்துறை அமைச்சர்தான் என்று கூறுகிறது சட்டசபை இணையதளம்.
எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் சுகாதார அமைச்சராகி சில வருடங்களே ஆகி விட்டன. ஆனால் அவர் இன்னும் பிற்பட்டோர் நலத்துறை அமைச்சர்தான்.
சுகாதாரத் துறை அமைச்சராக இருந்த சாத்தூர் ராமச்சந்திரன் தற்போது பிற்பட்டோர் நலத்துறை அமைச்சர். ஆனால் அவரை இன்னும் சுகாதாரத் துறை அமைச்சராகவே வைத்துள்ளது சட்டசபை இணையதளம்.
இதை விட கொடுமையாக ஆள் கடத்தல் வழக்கில் சிக்கி அமைச்சர் பதவியையும், கட்சிப் பதவியையும் இழந்து, கட்சியை விட்டும் நீக்கப்பட்டவர் என்.கே.கே.பி. ராஜா. ஆனால் அவரது பெயரை இணையதளத்திலிருந்து இன்னும் நீக்கவில்லை சட்டசபை. கைத்தறித் துறை அமைச்சராகவே அவர் இன்னும் நீடித்துக் கொண்டிருக்கிறார் சட்டசபை இணையதளத்தில்.
பூங்கோதை முன்பு சமூக நலத்துறை அமைச்சராக இருந்தார். பின்னர் நீக்கப்பட்டார். மறுபடியும் அவர் அமைச்சராக்கப்பட்டு தகவல் தொழில்நுட்பத்துறை தரப்பட்டது. ஆனால் சட்டசபை இணையதளத்தில் இன்னும் சமூக நலத்துறை அமைச்சராகவே அவர் இடம் பெற்றுள்ளார்.
அதேபோல கீதாஜீவன் சமூக நலத்துறை அமைச்சராகி நீண்ட காலமாகி விட்டது. இருந்தாலும் அவரை கால்நடைத்துறை அமைச்சராகவே இன்னும் வைத்துள்ளனர்.
மு.க.ஸ்டாலின் துணைமுதல்வராக்கப்பட்ட பின்னர் அதிகார வரிசைப்படி அவருக்கு 3வது இடம் தரப்பட்டுள்ளது. ஆற்காடு வீராசாமி நான்காவது இடத்திற்குப் போயுள்ளார். சட்டசபையிலும் கூட இப்படித்தான் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் சட்டசபையின் இணையதளத்தில் இன்னும் ஸ்டாலினை 4வது இடத்திலேயே வைத்துள்ளனர்.
இப்படி ஏகப்பட்ட குழப்பங்களுடன் கேலிக்கூத்தாக காணப்படுகிறது சட்டசபை இணையதளம். ஆயிரக்கணக்கானோர் பார்வையிடும் மிக முக்கியமான இணையதளம் இது. இப்படி இருக்கலாமா..?
-
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து? -
நேத்து வந்த ஸ்ரீநாத்துக்கு சீட்.. தூத்துக்குடி அஜிதா ஆக்னல் செய்த சம்பவம்! சொதப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications