தமி​ழ​கத்​தில் கல்​வெட்டு இயல் நிறு​வ​னம்: கரு​ணா​நிதி கோரிக்கை

Subscribe to Oneindia Tamil

Stone Scripture
சென்னை: இந்​திய தேசிய கல்​வெட்டியல் நிறு​வ​னத்தை தமி​ழ​கத்​தில் அமைக்க வேண்​டும் என்று பிர​த​மர் மன்​மோ​கன் சிங்​குக்கு முதல்​வர் கரு​ணா​நிதி கடி​தம் எழு​தி​யுள்​ளார்.​

அந்த கடி​தத்​தில் கூறப்​பட்​டுள்​ள​தா​வது:​

மத்​திய அர​சின் சார்​பில் தேசிய கல்​வெட்டு இயல் நிறு​வ​னம் உரு​வாக்​கப்​ப​டப் போகும் மகிழ்ச்​சி​யான செய்​தியை அறிந்​தேன்.​ நாட்​டின் பழ​மை​யான கல்​வெட்டு எழுத்​து​களை பாது​காக்​கும் அளப்​ப​ரிய முயற்​சி​யா​கும் இது.​

தொல்​லி​யல் துறை​யின் மத்​திய ஆலோ​ச​னைக் குழுக் கூட்​டம் கடந்த 2ம் தேதி நடை​பெற்​றது.​ அப்​போது,​​ இந்​திய தேசிய கல்​வெட்டு இயல் நிறு​வ​னத்தை தமி​ழ​கத்​தில் அமைக்க வேண்​டும் என்ற கோரிக்​கையை மாநி​லத்​தின் மிகச் சிறந்த தொல்​லி​யல் அறி​ஞ​ரும்,​​ பத்​ம​பூ​ஷண் விருது பெற்​ற​வ​ரு​மான ஐரா​வ​தம் மகா​தே​வன் முன்​வைத்​தார்.​

த​மி​ழ​கத்​தில் சுமார் 1 லட்​சம் வரை​யி​லான கல்​வெட்​டு​கள் உள்​ளன.​ அதில்,​​ 60,000 கல்​வெட்​டு​கள் தமி​ழில் உள்​ளன.​ ​ தமி​ழ​கத்​தில் தேசிய கல்​வெட்டு இயல் நிறு​வ​னத்தை அமைப்​ப​தற்​குத் தேவை​யான நிலம் உள்​ளிட்​ட​வை​களை ஒதுக்க மாநில அரசு தயா​ராக உள்​ளது.​

எ​னது,​​ இந்த வேண்​டு​கோளை கனி​வு​டன் பரிசீ​லிக்​கு​மாறு கேட்​டுக் கொள்​கி​றேன்.​

"தமி​ழ​கத்​தில் தேசிய கல்​வெட்டு இயல் நிறு​வ​னம் அமைக்​கப்​ப​டும்' என்ற அறி​விப்பு ஜூ​னில் நடை​பெற இருக்​கும் உலக தமிழ் செம்​மொழி மாநாட்​டுக்கு ​அச்​சா​ர​மாக இருக்​கும் என்று கடி​தத்​தில் முதல்​வர் கரு​ணா​நிதி கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+