வெவெடக்கும் வட மாநிலங்கள்- காஷ்மீரில் மைனஸ் 16 டிகிரி

Subscribe to Oneindia Tamil

டெல்லி: குளிர்காலம் துவங்கியுள்ளதை அடுத்து வடமாநிலங்களில் கடும் குளிர், பனிப்பொழிவு காணப்படுகிறது. காஷ்மீரில் இரவு நேர வெப்பநிலை மைனஸ் 16 டிகிரி அளவுக்கு குறைந்துள்ளது.

டெல்லி, காஷ்மீர், அரியானா, இமாச்சலப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், பீகார், ஜார்க்கண்ட், மத்திய பிரதேசம், பஞ்சாப், குஜராத், ராஜஸ்தான், சதீஸ்கர் உள்ளிட்ட வட மாநிலங்களில் வழக்கத்தை விட குளிர் அதிகரித்துள்ளது.

காஷ்மீர் மாநிலத்தில் அதிக குளிர் காணப்படுகிறது. அங்கு லடாக் பிரதேசத்திற்குட்பட்ட லே மற்றும் கார்கில் பகுதிகளில் பகல் நேர வெப்ப நிலை பூஜ்யத்திற்குக் கீழே போய் விட்டது.

கார்கிலில் மைனஸ் 3.5 டிகிரி செல்சியஸும், லே பகுதியில் மைனஸ் 1.6 டிகிரியும் குளிர் நிலவுகிறது. இங்கு இரவு நேர வெப்ப நிலை முறையே மைனஸ் 14.2, மைனஸ் 16 டிகிரி அளவுக்கு நிலவுகிறது.

தலைநகர் ஸ்ரீநகரில் பகல் நேர வெப்ப நிலை 3.5 டிகிரியாக குறைந்துள்ளது. இதனால் மக்கள் வெளியே நடமாட முடியாத அளவுக்கு நிலைமை மோசமாக இருக்கிறது.

பஞ்சாப், அரியானா, சண்டிகார் ஆகிய மாநிலங்களில் 4 டிகிரி வெப்ப நிலையும், அரியானாவில் 1.8 டிகிரி வெப்ப நிலையும், பஞ்சாபில் 5.5 டிகிரி வெப்ப நிலையும் நிலவுகிறது.

இமாச்சலப் பிரதேசத்தில் இரவில் 5.7 டிகிரியும், பகலில் 13.5 டிகிரியும், ராஜஸ்தானில் 4.2 டிகிரியும் இருக்கிறது.

டெல்லியில் காலை நேர வெப்ப நிலை 8.4 டிகிரியாக இருந்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+