தமிழக கல்லூரிகளில் விரைவில் 'ஜூனியர் போலீஸ்'

தமிழக காவல்துறையில் மாணவர்களுக்கும், போலீசாருக்கும் நல்லுறவை ஏற்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சென்னையில், நகர போலீஸ் நிலையங்களை சுற்றிப்பார்க்கவும் சமீபத்தில் பள்ளி மாணவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.
மேலும், போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் மாநிலம் முழுவதும் 36 ஆயிரம் பள்ளி மாணவர்கள் ஈடுபடுத்தப்படுகிறார்கள். காவல் துறையில் மாணவர்களின் பங்களிப்பை மேம்படுத்தவும், நல்லுறவை வலுப்படுத்தவும் திட்டங்கள் தீட்டப்படுகின்றன.
இந்நிலையில், என்.சி.சி, என்.எஸ்.எஸ் அமைப்புகளைப் போல, கல்லூரிகளில் ஜுனியர் போலீஸ்' என்ற ஒரு புதிய அமைப்பை தொடங்கலாம் என்று அதிகாரிகள் மட்டத்தில் ஆலோசித்து வருகிறார்கள்.
சட்டத்தை செயல்படுத்தும் அதிகார அமைப்பாக இல்லாமல், போலீசுக்கு உதவிக்கரமாக செயல்படும் ஒரு அமைப்பாக இதனை உருவாக்க திட்டமிட்டுள்ளனர். இதுகுறித்து விரைவில் அரசின் கவனத்துக்கு கொண்டு செல்ல உயர் போலீஸ் அதிகாரிகள் தயாராகி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications