அவ்வை நடராஜன்-சுகி சிவத்துக்கு கலைமாமணி விருது
சென்னை: தமிழறிஞரும் இலக்கியப் பேச்சாளருமான அவ்வை நடராஜன், ஆன்மீக சொற்பொழிவாளரான சுகி சிவம் ஆகியேர் உள்பட
71 பேருக்கு தமிழக அரசின் கலைமாமணி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இது குறித்து அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
கலைத்துறையில் சிறப்பாக பணியாற்றி வரும் கலைஞர்களை பாராட்டி ஆண்டுதோறும் கலைமாமணி விருதுகளை தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றம் வழங்கி சிறப்பு செய்து வருகிறது. விருது பெறும் ஒவ்வொரு வருக்கும் பொற்பதக்கம் வழங்கப்படுகிறது.
இந்த ஆண்டு கலைமாமணி விருதுக்கான கலைஞர்களை தேர்வு செய்து தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றம் பரிந்துரை செய்துள்ளது. அந்த பரிந்துரைகளை ஏற்று, விருது பெறுபவர்களை முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார். அதன் விவரம்:
1. அ.மாதவன் - இயற்றமிழ்க் கலைஞர்
2. கவிஞர் சிற்பி - இயற்றமிழ்க் கவிஞர்
3. சரளா ராஜகோபாலன் - இயற்றமிழ் ஆராய்ச்சியாளர்
4. குருசாமி தேசிகர் - இயற்கலை பண்பாட்டு கலைஞர்
5. அவ்வை நடராஜன் - இலக்கிய பேச்சாளர்
6. மாசிலாமணி (கன்னியாகுமரி) - இலக்கிய பேச்சாளர்
7. சீர்காழி எஸ்.ஜெயராமன் - இசை ஆசிரியர்
8. எம்.எஸ்.முத்தப்பா (நாகர்கோவில்) - இசை ஆசிரியர்
9. மகாராஜபுரம் சீனிவாசன் - குரலிசை
10. ஏ.வி.எஸ்.சிவகுமார் - குரலிசை
11. எம்பார் கண்ணன் - வயலின்
12. வழுவூர் ரவி - மிருதங்கம்
13. டிரம்ஸ் சிவமணி - டிரம்ஸ்
14. சுகி சிவம் - சமய சொற்பொழிவாளர்
15. சதாசிவன் (நாகர்கோவில்) - இறையருட் பாடகர்
16. வீரமணி ராஜூ - இறையருட் பாடகர்
17. டி.வி.ராஜகோபால் பிள்ளை (திருவாரூர்) - நாதசுரம்
18. எஸ்.வி.மீனாட்சி சுந்தரம் (லால்குடி) - நாதசுரம்
19. தலைச்சங்காடு டி.எம்.ராமநாதன் - தவில்
20. ஏ.மணிகண்டன் (சேந்தமங்கலம்) - தவில்
21. செல்வி ஷைலஜா - பரத நாட்டிய ஆசிரியர்
22. செல்வி ஸ்வேதா கோபாலன் - பரத நாட்டியம்
23. செல்வி சங்கீதா கபிலன் - பரதநாட்டியம்
24. செல்வி கயல்விழி கபிலன் - பரதநாட்டியம்
25. ஐஸ்வர்யா ரஜினிகாந்த் - பரதநாட்டியம்
26. வசந்தா வைகுந்த் - நாட்டிய நாடகம்
27. மு.ராமசாமி - நாடக ஆசிரியர்
28. கூத்துப்பட்டறை முத்துசாமி - நாடக தயாரிப்பாளர்
29. ராஜாமணி - நாடக நடிகை
30. சி.டேவிட் - இசை நாடக மிருதங்க கலைஞர்
31. புதுக்கோட்டை ச.அர்ச்சுனன் - நாடக ஆர்மோனிய கலைஞர்
32. விழுப்புரம் விசுவநாதன் - தெருக்கூத்து
33. சங்கர பாண்டியன் - காவடியாட்டம்
34. வேலவன் சங்கீதா - வில்லுப்பாட்டு
35. பெ.கைலாசமூர்த்தி (தூத்துக்குடி) - ஒயிலாட்டம்
36. துறையூர் முத்துக்குமார் - காளியாட்டம்
உள்பட 71 பேருக்கும் ஆளுநர் மற்றும் முதல்வர் கருணாநிதி இந்த விருதுகளை வழங்குவார்கள். விருது வழங்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications