டிச 4ல் தூத்துக்குடியில் கடற்படை வாரவிழா: ஹெலிகாப்டர் சாதனை நிகழ்ச்சி இல்லை
தூத்துக்குடி: கடற்படை வாரவிழா கொண்டாட்டங்கள் டிச 2,3,4 ஆகிய தேதிகளில் பாளையங்கோட்டை அரசு பொறியியல் கல்லூரி அருகே உள்ள கடற்படை தகவல் பெரும் மையத்தில் நடைபெறுகின்றன என்று விஜயநாராயணம் ஐஎன்எஸ் கடற்படை கமாண்டர் சுபாஷ் காடா தெரிவித்தார்.
இது குறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது,
கடந்த 1971-ம் ஆண்டு நடந்த இந்தியா-பாகிஸ்தான் போரில் டிசம்பர் 4-ம் தேதி இந்திய கடற்படை அதிரடி தாக்குதலை நடத்தி வெற்றி பெற்றது. இதை நினைவு கூறும்வகையில் ஆண்டுதோறும் டிசம்பர் 4-ம் தேதி கடற்படை வாரவிழா கொண்டாடப்படுகிறது.
இந்திய கடற்படை குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும், போர்க்காலங்களில் தாய்நாட்டிற்காக உயிரைத் தியாகம் செய்தவர்களை நினைவு கூறும்பொருட்டும் இவ்விழா கொண்டாடப்படுகிறது.
கடற்படை வாரவிழாவின் ஒரு பகுதியாக வரும் டிச 2,3,4 ஆகிய தேதிகளில் பாளையங்கோட்டை அரசு பொறியியல் கல்லூரி அருகே உள்ள கடற்படை தகவல் பெரும் மையத்தில் பல நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வரும் 3-ம் தேதி கடற்கரையை தூய்மையாக வைப்பது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கடற்படை வீரர்கள் கன்னியாகுமரி கடற்கரையை சுத்தப்படுகின்றனர். தொடர்ந்து வரும் ஜனவரி மாதம் தூத்துக்குடி துறைமுகத்திற்கு இந்திய கடற்படைக்கு சொந்தமான போர்க்கப்பல்கள் வருகின்றன.
இதை பொதுமக்கள், மாணவர்கள் பார்வையிட அனுமதிக்கப்படுவார்கள். மோசமான வானிலை காரணமாக இந்த ஆண்டு ஹெலிகாப்டர் சாதனை நிகழ்ச்சி மட்டும் நடைபெறாது. இவ்வாறு அவர் கூறினார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications