நவம்பர் 15ல் ஊட்டி-குன்னூர் சாலை திறப்பு: அமைச்சர் ராசா
ஊட்டி: ஊட்டி - குன்னூர் சாலை வரும் 15 ம் தேதி போக்குவரத்து துவக்கப்படும் என மத்திய அமைச்சர் ஆ. ராசா தெரிவித்தார்.
ஊட்டியில் மாவட்ட அளவிலான விழிப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் மத்திய தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஆ. ராசா தலைமையில் நடைபெற்றது.
அப்போது செய்தியாளர்களிடம் ராசா பேசுகையில்,
மாவட்டத்தில், மத்திய மற்றும் மாநில அரசுகள் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளின் நிலை குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
நிலச்சரிவு ஏற்பட வண்ணம், ஆறு மாதங்களுக்கு முன்பே பேரிடர் மேலாண்மை பணிகளை மேற்கொள்ள அனைத்து துறைகளையும், முடுக்கி விடப்பட்டுள்ளது. 7,000 மழை நீர்வடிகால்வாய்கள் தூர்வாரப்பட்டுள்ளன.
அரசு வீட்டு வசதி திட்டத்தில், நீலகிரியில் 216 வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. இதற்கு தேவைப்படும் கட்டுமானப் பொருட்கள் கொண்டு வருவதில் தாமதம் ஏற்படுவதாக ஊராட்சித் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
இப்பிரச்சனையை மாவட்ட நிர்வாகம் விரைவில் சீர் செய்யும்.
ஊட்டி - குன்னூர் சாலை போர்க்கால அடிப்படையில் சீரமைக்கப்பட்டு வருகிறது. எனவே, வரும் 15 ம் தேதி முதல் போக்குவரத்திற்கு திறந்துவிடப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications