ராபர்ட் கால்டுவெல் அரசு நினைவு இல்லப் பணிகள் தொடக்கம்
நெல்லை: இடையன்குடியில் ராபர்ட் கால்டுவெல் வாழ்ந்த இல்லத்தை மேம்படுத்தி அழகுபடுத்த திட்ட மதிப்பீடு தயார் செய்யப்படுகிறது.
திராவிட மொழிகள் என்ற சொல்லாக்கத்தை முதன் முதலில் உருவாக்கிய பிஷப் கால்டுவெல் இடையன்குடியில் வாழ்ந்த இல்லத்தை அரசு நினைவு இல்லமாக மாற்ற தமிழக முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டார்.
இதனையடுத்து செய்தி மக்கள் தொடர்பு துறை துணை இயக்குனர் (நினைவகம்) ராஜ்குமார், பொதுபணி துறை செயற்பொறியாளர் சீனிவாசன் மற்றும் அதிகாரிகள் இடையன்குடியில் பிஷப் கால்டுவெல் வாழ்ந்த இல்லத்தை நேரில் சென்று பார்வையிட்டு மேம்பாட்டு பணிகள் குறித்து ஆய்வு செய்தனர்.
பொதுப்பணி துறை மூலம் இந்த மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ளவும், இந்த இல்லத்தை செப்பனியிட்டு அழகுபடுத்தவும் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு அரசுக்கு பரிந்துரை செய்யவும் முடிவு செய்யப்பட்டது.
இதில் தாசில்தார் கிருஷ்ணமூர்த்தி, சேகர குரு மாணிக்கம், இடையன்குடி பஞ்சாயத்துத் தலைவர் ஜெயகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications