'நேஷனல் ஜியோகிராபிக்' தொலைக்காட்சிக்கு எச்சரிக்கை
Subscribe to Oneindia Tamil

கடந்த ஆண்டு ஆகஸ்ட் 4ம் தேதி 'தெற்காசியாவில் காண்டாமிருகங்கள்' (Rhinos in South Asia) என்ற நிகழ்ச்சியில் ஜம்மு-காஷ்மீர் மாநிலம் சர்ச்சைக்குரிய வகையில் இடம்பெற்றுள்ள வரைபடத்தை இந்தத் தொலைக்காட்சி காட்டியது.
இது குறித்து விளக்கம் அளிக்குமாறு அந்த தொலைக்காட்சிக்கு செப்டம்பர் மாதம் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பியது.
இதற்கு அந்த தொலைக்காட்சி நிறுவனம் அளித்த விளக்கம் திருப்தி அளிக்காததால் மத்திய அரசு மீண்டும் எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
மீண்டும் இதே போன்ற தவறைச் செய்தால் கடும் விளைவை சந்திக்க வேண்டிவரும் என்று அதி்ல் எச்சரிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications