துபாய்: வானலை வளர்தமிழ் கவிதை இதழ் வெளியீடு
துபாய் கராமா சிவஸ்டார் பவனில் நேற்று (வெள்ளிக்கிழமை) காலை நடைபெற்ற நிகழ்ச்சியின் துவக்கமாக அனீஷா தமிழ்த்தாய் வாழ்த்து பாடினார்.
'கடலும் படகும்' எனும் தலைப்பில் சிறப்புக் கவிதை நிகழ்ச்சி நடைபெற்றது. கவிதை நிகழ்ச்சியின் நடுவர்களாக வானலை வளர்தமிழ் அமைப்பின் செயலாளர் சந்திரசேகர் மற்றும் முகவை காளிதாஸ் பங்கேற்றனர்.
ஜியா, சிம்மபாரதி, நர்கிஸ், ஜீனத் கமால், கந்தநாதன், ஜெயா பழனி, இளையசாகுல், முகவை முகில், சந்திரசேகர், ஜெயராமன் ஆனந்தி, நிவேதிதா, ஒகளூர் நிலவன், கார்த்திக், ஹரிஸ், லட்சு, ஆதிபரண் உள்ளிட்டோர் கவிதை வாசித்தனர்.
பின்னர் 'கடலும் படகும்' முதல் இதழை கராமா மெடிக்கல் சென்டர் இயக்குநர் வில்லியம்ஸ் வெளியிட சந்திரசேகர் தாயார் பெற்றுக்கொண்டார்.
விழாவில் இலங்கை தமிழ்ச் சங்க நிர்வாகி டாக்டர் ஜின்னாஹ் ஷரீபுத்தீன், சங்கமம் தொலைக்காட்சி கலையன்பன், தமிழக அரசின் ஓய்வுபெற்ற பள்ளிக் கல்வித்துறை இணை இயக்குநர் எம்.எஸ். நெய்னா முஹம்மது கலந்து கொண்டனர்.
மேலும், ஷேக் சிந்தா மதார், ஒகளூர் நிலவன், ஹரிதாஸ், முத்துக்குமார், கார்த்தி மற்றும் கவிதை ஆர்வலர்கள் விழாவில் கலந்துகொண்டனர்.
சிம்மபாரதி நன்றி கூறினார். நிகழ்ச்சிக்குப் பின்னர் மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது













Click it and Unblock the Notifications